கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

விரைவான உண்மைகள் கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், சங்கரன்கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில், வைப்பாற்றின் தென்கரையில் கரிவலம்வந்தநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

வரலாறு

குலசேகர பாண்டியன் வேட்டையாடுவதற்காகச் சென்றிருந்தபோது ஒரு யானை எதிர்ப்பட்டதாகவும், அந்த யானையை துரத்த அவர் சென்றபோது, அது சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு இறைவன் இருந்த புதரை வலம் வந்து சிவகணமாகப் பெற்றதால் இப்பெயரைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.[1]

இறைவன், இறைவி

இங்குள்ள மூலவர் பால்வண்ணநாதர் ஆவார். படிக லிங்கமாக இருப்பதால் பால்வண்ணநாதர் என்றும், களமரம் தலமரமாக இருப்பதால் திருக்களா ஈசர் என்றும், திருமுகம் விளங்கித்தோன்றுகின்ற லிங்க வடிவமாக இருப்பதால் முகலிங்கர் எனவும் மூலவர் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி ஒப்பனை அம்மன் ஆவார்.[1]

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

இங்குள்ள இறைவனைப் பற்றி எழுந்த பாடல்களைக் கொண்ட நூல் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி எனப்படும்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads