கருங்கொண்டை நாகணவாய்

ஒரு வகை நாகணவாய் இனப் பறவை From Wikipedia, the free encyclopedia

கருங்கொண்டை நாகணவாய்
Remove ads

கருங்கொண்டை நாகணவாய் அல்லது கருந்தலை மைனா (ஆங்கிலப்பெயர்: brahminy myna அல்லது brahminy starling, அறிவியல் பெயர்: Sturnia pagodarum[2]) என்பது நாகணவாய் குடும்ப பறவைகளில் ஒன்றாகும். இது பொதுவாக இணையாகவோ அல்லது சிறு குழுவாகவோ இந்திய துணைக் கண்டத்தின் சமவெளிகளின் திறந்த வெளிப் பகுதிகளில் காணப்படும்.

விரைவான உண்மைகள் கருங்கொண்டை நாகணவாய், காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

கருங்கொண்டை நாகணவாய் மைனாவை விடச் சற்றுச் சிறியதாக சுமார் 21 செ.மீ நீளமாக இருக்கும். இதன் அலகின் அடிப்பகுதி பசுமை தோய்ந்த ஈய நிறமாகவும், முனைப்பகுதி மஞ்சளாக இருக்கும். விழிப்படலம் மஞ்சள் தோய்ந்த பாலாடை நிறமாகவும், கால்கள் எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலையும் சிறு கொண்டையும் கரிய நிறத்தில் காணப்படும். உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் நிறத்திலும், இறக்கைகள் கறுப்பு நிறத்திலும், உடலின் அடிப்பகுதி சிவப்புத் தோய்ந்த மஞ்சள் பழுப்பு நிறத்திலும், வால் பழுப்பாக வெள்ளை முனைகளோடு காட்சியளிக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளின் தலையில் கொண்டை இருக்காது, தலை புகை கறுப்பு நிறத்தில் இருக்கும்.

Remove ads

பரவலும் வாழ்விடமும்

இவை வருடம் முழுவதும் நேபாளம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பறவைகள் ஆகும். குளிர் காலத்தில் இவை இலங்கைக்கும் மற்றும், கோடை காலத்தில் மேற்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இமயமலை பகுதிகளுக்கும் வலசை செல்லும் பறவைகள் ஆகும். பாகிஸ்தானின் சமவெளிப் பகுதிகளிலும் இவை காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் சமவெளி பகுதியில் காணப்பட்டாலும் 3000 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான பகுதிகளிலும் இவை காணப்பட்டுள்ளன. அவ்வாறு காணப்பட்ட இடங்கள் பெரும்பாலும் லடாக் பகுதியிலேயே உள்ளன.[3]

இப்பறவை பொதுவாக உலர்ந்த காடுகள், புதர் நிறைந்த காடுகள் மற்றும் சாகுபடி செய்யப்படும் விளைநிலங்களுக்கு அருகிலேயே காணப்படும். பெரும்பாலும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே காணப்படும். இவை பொதுவாக நீர் தேங்கிய அல்லது சதுப்பு நிலப் பகுதிகளை தேர்வு செய்து வசிக்கக் கூடியவை ஆகும்.[4]

Remove ads

இனப்பெருக்கம்

இவை ஏப்ரல் முதல் ஆகத்து முடிய இனப்பெருக்கம் செய்கின்றன. சுவர்கள் அல்லது தரங்களில் உள்ள பொந்துகளில் புல், இறகு, கந்தல் துணி ஆகியவற்றைக் கொண்டு கூடு அமைக்கும். கூட்டில் மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இதன் முட்டைகள் வெளிர் நீலமாக கறைகள் ஏதும் இல்லாமல் இருக்கும்.

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads