கரேலியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரேலிய குடியரசு (Republic of Karelia, ரஷ்ய மொழி: Респу́блика Каре́лия; கரேலிய மொழி: Karjalan tazavaldu) ரஷ்யக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும்.

விரைவான உண்மைகள் கரேலியா, நாடு ...

வரலாறு

Thumb
வடக்கு, மற்றும் தெற்கு கரேலியா பகுதிகள் பின்லாந்திலும், கரேலியக் குடியரசு உருசியாவிலும் அமைந்துள்ளன. கரேலிய இஸ்த்முஸ் லெனின்கிராத் ஓப்லஸ்தில் உள்ளது.

வரலாற்று ரீதியாக, கரேலியா முன்னர் நோவ்கோரத் குடியரசில் உருசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு பிரிவாக இருந்தது. இது இன்றைய பின்லாந்தின் கிழக்கே அமைந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டு தொடக்கம் இதன் பல பகுதிகள் சுவீடியர்களினால் கைப்பற்றப்பட்டு சுவீடியக் கரேலியா என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1721 ஆம் ஆண்டில் உருசியாவினுடனான போரை அடுத்து ஏற்பட்ட உடன்பாட்டின் படி உருசியாவுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

1920 இல், இப்பகுதி கெரேலிய தொழில் கம்யூன் என அழைக்கப்பட்டது. 1923 கரேலிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு ஆனது. 1940 முதல் கரேலோ-பின்னிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆக மாற்றப்பட்டது. ஆனாலும், பின்னரும் தொடர்ந்த போரை அடுத்து கரேலிய இஸ்துமுஸ் எனப்படும் பகுதி லெனின்கிராத் ஓப்லஸ்துடன் இணைக்கப்பட்டது. 1956 இல் இது மீண்டும் தன்னாட்சியுடன் கூடிய சோவியத் சோசலிசக் குடியரசானது. 1941 ஆம் ஆண்டில் தொடர்ந்த போரின் போது பின்லாந்து இதன் பல பகுதிகளை ஆக்கிரமித்திருந்தாலும், 1944 இல் பின்லாந்து அங்கிருந்து பின்வாங்கியது. உருசியாவுக்கு இழந்த கரேலியாவின் பகுதிகளை பின்லாந்து திரும்ப எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தாலும், பின்லாந்தின் அரசியலில் எப்போதும் இது ஒரு சூடான பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

இப்போதுள்ள தன்னாட்சியுடன் கூடிய கெரேலியக் குடியரசு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடுத்து 1991 ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் உருவாக்கப்பட்டது.

Remove ads

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads