கர்னூல்

From Wikipedia, the free encyclopedia

கர்னூல்map
Remove ads

கர்னூல் (ஆங்கிலம்:Kurnool), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஆந்திராவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்ரா ஆறு மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.

விரைவான உண்மைகள் கர்னூல், நாடு ...
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 15.83°N 78.05°E / 15.83; 78.05 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 274 மீட்டர் (898 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் கர்னூலில் எழுத்தறிவு ...

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,25,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7][2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குர்நூல் மக்களின் சராசரி கல்வியறிவு 77.37% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83.01%, பெண்களின் கல்வியறிவு 71.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 73% விட கூடியதே.

மதம்

மேலதிகத் தகவல்கள் கர்னூல் நகரில் உள்ள மதங்கள்(2011) ...

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இறுதித் தரவுகளின்படி, கர்னூல் நகர்ப்புறத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். கர்னூலில் காணப்படும் பிற மதக் குழுக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைனர்கள்[8]

மொழி




Thumb

கர்னூல் நகரத்தின் மொழிகள் (2011)[9]

  உருது (28.17%)
  இந்தி (1.02%)
  மற்றவை (2.90%)

தெலுங்கு (67.91%) அதிகாரப்பூர்வ மற்றும் அதிகம் பேசப்படும் மொழியாகும். உருது (28.17%) மற்றும் இந்தி (1.02%) ஆகியவையும் பேசப்படுகின்றன.[9]

Remove ads

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads