கலாபாக்கான்
சபா மாநிலத்தில் ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாபாக்கான் நகரம் (மலாய்: Kalabakan Town; ஆங்கிலம்: Pekan Kalabakan என்பது மலேசியா, சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவு, கலாபாக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
தாவாவ் நகரத்தில் இருந்து 55 கி.மீ.; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ளது.
Remove ads
பொது
கலாபாக்கானின் உட்புற மேற்குப் பகுதியில் குவாமுட் உயர்நிலம்; வடகிழக்கில் தாவாவ் உயர்நிலம் (Tawau Highlands); ஆகிய இரு உயர்நிலங்களும் கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளன.
குவாமுட் உயர்நிலம் 26880 எக்டர் பரப்பளவு கொண்டது. இந்தக் குவாமுட் உயர்நிலத்தில் மிகப்பெரிய வனப் பகுதி உள்ளது. அதன் மேற்கில் உள்ள மலியாவ் படுகை காப்பு மண்டலமாகவும் செயல்படுகிறது.[1]
கலாபாக்கானில் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலை உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 2100 மி.மீ.; சூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழைப்பொழிவு உச்சம் காண்கிறது.[2]
Remove ads
வரலாறு
கலாபாக்கான் என்ற இடத்தின் பெயர் திடோங் மொழியில் இருந்து வந்தது. கலாபாக்கான் என்றால் "சாப்பிடலாம்" என பொருள்படும். இந்தப் பகுதியில் மூருட் மற்றும் திடோங் பழங்குடியின மக்கள் மிகுதியாய் வாழ்கின்றனர்.
1905-ஆம் ஆண்டு தொடங்கி 1932-ஆம் ஆண்டு வரை, இலண்டனைத் தளமாகக் கொண்ட கோவி ஆர்பர் நிலக்கரி நிறுவனம் (Cowie Harbour Coal Company) சிலிம்போபோன் (Silimpopon) எனும் இடத்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை இயக்கி வந்தது. சுரங்கத்தின் தொழிலாளர்களில் பெரும்பாலோர் சீனர்களாய் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை 3000-க்கும் அதிகமாக இருந்தது. அந்தச் சுரங்கம் 1.5 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது.[3]
தொடருந்து மற்றும் கப்பல் மூலமாக நிலக்கரி கனிமம், செபாடிக் தீவுக்கு (Sebatik Island) கொண்டு செல்லப்பட்டு; பின்னர் ஏற்றுமதி செய்வதற்காக அங்கு கப்பல்களில் ஏற்றப்பட்டது.[4]
Remove ads
இந்தோனேசியா - மலேசியா மோதல்

திசம்பர் 29, 1963-இல் இந்தோனேசியாவில் இருந்து ஊடுருவிய இந்தோனேசியப் போராளிகள் மலேசிய இராணுவ முகாமைத் தாக்கிய போது ஏழு மலேசிய வீரர்களும்; அவர்களின் தளபதியும் இறந்தனர். அவர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவகம் கலாபாக்கான் நகரில் உள்ளது.
இந்தோனேசியா - மலேசியா மோதல் (Indonesia–Malaysia confrontation) என்பது 1963-ஆம் ஆண்டு தொடங்கி 1966-ஆம் ஆண்டு வரையில் இந்தோனேசியாவுக்கும் - மலேசியாவுக்கும் இடையே நடைபெற்ற ஓர் ஆயுத மோதலைக் குறிப்பிடுவதாகும்.
இந்த மோதல் 1960-ஆம் ஆண்டுகளில் மலேசியா உருவாக்கப் படுவதில் இந்தோனேசியாவின் எதிர்ப்பில் இருந்து உருவானது. இந்தோனேசியா மற்றும் கிழக்கு மலேசியா - போர்னியோ கலிமந்தான் எல்லைப் பகுதிகளில் பெரும்பாலான மோதல்கள் நடைபெற்றன.
கலாப்பாகான் தாக்குதல்
இந்தோனேசியா-மலேசியா மோதலின் போது, 29 டிசம்பர் 1963-இல் கலாப்பாகான் பகுதியில் இந்தோனேசியப் படைகளால் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த மோதல்கள், பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற மோதல்களாகும். தனிமைப் படுத்தப்பட்ட தரைப் போர் என வகைப்படுத்தப் படுகிறது.
1965-இல் இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, இந்தச் சர்ச்சை அமைதியாக ஒரு முடிவுக்கு வந்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads