கலாமண்டலம் சரசுவதி

இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலாமண்டலம் சரசுவதி (Kalamandalam Saraswathi) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மோகினியாட்டம், பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி போன்ற நடன வடிவங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார். சரசுவதி 1983 ஆம் ஆண்டில் பரதநாட்டியத்திற்காக கேரள சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார். இவர் இறந்த மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயரின் மனைவியாவார்.[1]

விரைவான உண்மைகள் கலாமண்டலம் சரசுவதி, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

சரசுவதி, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள குழல்மன்னம் கிராமத்தில் ஒரு தமிழ் பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். 1960 ஆம் ஆண்டில் கலாமண்டலத்தில் சேர்ந்த இவர், தொட்டச்சேரி சின்னம்மு அம்மா மற்றும் கலாமண்டலம் சத்யபாமா ஆகியோரின் பயிற்சியின் கீழ் மோகினியாட்டத்தைப் படித்தார். பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன், இராஜரத்னம் பிள்ளை, சுதாராணி இரகுபதி, கலாநிதி அம்மாள் மற்றும் வேம்பதி சின்ன சத்யம் ஆகியோரின் கீழ் குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடன வடிவங்களையும் சரசுவதி பயின்றார். 1977 ஆம் ஆண்டில், இவர் எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயரை மணந்தார்.[2] சரசுவதி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இந்திய அரசின் கலாச்சார பரிமாற்றத் திட்டத்திற்காக, இவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் 1991-92 காலத்தில் மோகினியாட்டம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.[3]

Remove ads

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

1983 ஆம் ஆண்டில், சரசுவதிக்கு பரதநாட்டியத்திற்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் தொழில்முறை சிறப்புக்கான அரிமா சங்க விருதைப் பெற்றார். கலாமணடலம் நிறுவனத்தின் பொன்விழாவின் போது கௌரவிக்கப்பட்ட கலைஞர்களில் இவரும் ஒருவர். 2022 ஆம் ஆண்டில், பாரம்பரிய நடன வடிவங்களில் தனது ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக சரசுவதி சுவராலய கலாமண்டலம் இராமன்குட்டி நாயர் நினைவு விருதையும் வென்றார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads