கலிங்க இராச்சியம்

இந்தோனேசியாவின் வடக்கு கடற்கரையில் 6- ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இராச்சியம் From Wikipedia, the free encyclopedia

கலிங்க இராச்சியம்
Remove ads

கலிங்க இராச்சியம் ( Kalingga Kingdom ) [1] என்பது இந்தோனேசியாவின் நடுச் சாவகத்தின் வடக்கு கடற்கரையில் 6- ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்தியமயமாக்கப்பட்ட இராச்சியம் ஆகும்.

விரைவான உண்மைகள் கலிங்க இராச்சியம், தலைநகரம் ...

இது நடு சாவகத்திலுள்ள ஆரம்பகால இந்து-பௌத்த இராச்சியமாக இருந்தது. மேலும் குடாய் மற்றும் தருமநகரம் ஆகியவை போன்றே இதுவும் இந்தோனேசிய வரலாற்றில் பழமையான இராச்சியமாகும்.

Remove ads

வரலாற்று ஆக்கம்

இந்த காலகட்டத்தின் தொல்லியல் கண்டுபிடிப்புகளும் வரலாற்று பதிவுகளும் குறைவு. மேலும் இராச்சியத்தின் தலைநகரின் சரியான இடமும் தெரியவில்லை. இது இன்றைய பெக்காலோஙான் அல்லது ஜெபராவிற்கு இடையில் எங்கோ இருந்ததாக கருதப்படுகிறது.

கெலிங் துணை மாவட்டம் ஜெபரா ரீஜென்சியின் வடக்கு கடற்கரையில் காணப்படுகிறது. இருப்பினும் பெக்காலோங்கன் மற்றும் படாங் ரீஜென்சிக்கு அருகிலுள்ள சில தொல்லியல் கண்டுபிடிப்புகள் பெக்காலோங்கன் ஒரு பண்டைய துறைமுகம் என்பதைக் காட்டுகிறது. பெக்காலோங்கன் என்பது பெ-கலிங்-ஆனின் மாற்றப்பட்ட பெயராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்து-பௌத்த இராச்சியம்

கலிங்கம் 6-7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இருந்தது. மேலும் இது சாவகத்தில் நிறுவப்பட்ட ஆரம்பகால இந்து-பௌத்த இராச்சியங்களில் ஒன்றாகும். இந்த இராச்சியத்தின் வரலாற்றுப் பதிவு அரிதானது. மேலும், தெளிவற்றது, மேலும் பெரும்பாலும் சீன ஆதாரங்கள் மற்றும் உள்ளூர் மரபுகளிலிருந்து வருகிறது.

நடு சாவகத்தின் வடக்கில் அமைந்டிருந்தாகக் கருதப்படும் கலிங்கம் 5 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. கலிங்க இராச்சியம் பற்றிய தகவல்கள் சீனாவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் பதிவுகள் மூலம் பெறப்படுகின்றன. பொ.ச.752 இல், கலிங்க இராச்சியம் சிறீவிஜயத்தின் கைப்பற்றப்பட்ட பிரதேசமாக மாறியது.

சிறீவிஜயம் முன்பு கைப்பற்றிய தர்மாஸ்ரயா மற்றும் தருமநகர இராச்சியங்களுடன் இந்த இராச்சியம் ஒரு வர்த்தக வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. மூன்று இராச்சியங்களும் சிறீவிஜய - பௌத்த வர்த்தக வலையமைப்பின் வலுவான போட்டியாளர்களாக மாறின.[2]

Remove ads

வரலாறு

சீன ஆதாரங்கள் சீனாவிலிருந்து வந்தவை. மேலும், தாங் வம்சத்திற்கு முந்தையவை. சீன பௌத்த துறவி ஈஜிங்கின் கூற்றுப்படி, 664 இல் ஈனிங் (會寧'Huìníng' ) என்ற சீன புத்த துறவி ஹெலிங்கிற்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த காலத்திலும், ஹெலிங் துறவியான ஞானபத்ரனின் உதவியோடும், ஏராளமான புத்த ஈனயான நூல்களை மொழிபெயர்த்தார்.[3][4]:79

பொ.ச.674 ஆம் ஆண்டில் இராணி ஷிமா என்பவரால் ஆளப்பட்டது. திருட்டுக்கு எதிரான அவரது கடுமையான சட்டம் காரணமாக அவரது மக்களை நேர்மையாகவும் முழுமையான உண்மையை நிலைநிறுத்தவும் ஊக்குவித்தது. பாரம்பரியத்தின் படி, ஒரு நாள் ஒரு வெளிநாட்டு மன்னர் கலிங்க மக்களின் உண்மையையும் நேர்மையையும் சோதிக்க கலிங்கத்தின் ஒரு வீதியில் தங்கம் நிரப்பப்பட்ட ஒரு பையை வைத்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஷிமாவின் மகன், பட்டத்து இளவரசன், தற்செயலாக பையை தனது காலால் தொடும் வரை, தங்களுக்குச் சொந்தமில்லாத பையை யாரும் தொடத் துணியவில்லை. ராணி தனது சொந்த மகனுக்கு மரண தண்டனை விதித்தார்.

சுந்தா இராச்சியம்

ஆனால் தங்கப் பையை தொட்டது இளவரசனின் கால்தானே தவிர தலையல்ல, எனவே இளவரசனின் உயிரைக் காப்பாற்றுமாறு இராணிக்கு முறையீடு செய்த ஒரு அமைச்சரால் இளவரசன் தண்டணையிலிருந்து தப்பித்தார்.[3] பிற்காலத்தில் இயற்றப்பட்ட புத்தகமான கரிதா பராஹ்யங்கனின் கூற்றுப்படி, ஷிமாவின் கொள்ளுப் பேரன் சஞ்சயன் சுந்தா இராச்சியம் மற்றும் காலு இராச்சியம் மற்றும் மாதரம் இராச்சியத்தின் நிறுவனர் ஆவார்.

பொ.ச.742 மற்றும் 755 க்கு இடையில், இராச்சியம் தீங் பீடபூமியில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்தது. ஒருவேளை பௌத்த சைலேந்திரர்களின் முற்றுகையினால் இருக்கலாம்.[4]:90

Remove ads

கல்வெட்டுகள்

துக்மாஸ் கல்வெட்டு கலிங்க காலத்தில் எழுதப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மெராபி மலையின் மேற்குச் சரிவில், துசுன் தகாவு, லெபக் கிராமம், கெகாமடன் கிராபாக், மகலாங் ரீஜென்சி, நடு சாவகம் ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சமசுகிருதத்தில் பல்லவ எழுத்தில் எழுதப்பட்ட இந்தியாவின் புனித கங்கையைப் போன்றதொரு தெளிவான நீரூற்றைப் பற்றி கூறுகிறது.

கல்வெட்டில் திரிசூலம், கமண்டலம் (தண்ணீர் ஜாடி), பரசு (கோடாரி), 'காலசெங்கா', சக்ரங்கள், பத்மம் (தாமரை) போன்ற இந்து அடையாளங்களும் உருவங்களும் உள்ளன. இவை இந்துக் கடவுள்கள்களின் சின்னங்களாகும்.[5]

சோஜோமெர்டோ கல்வெட்டு

இதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு சோஜோமெர்டோ கல்வெட்டு ஆகும். இது நடு சாவகத்தின் படாங் ரீஜென்சியின் கெகாமடன் ரெபன் என்ற சோஜோமெர்டோ கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய மலாய் மொழியில் காவி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

சாந்தனு மற்றும் பத்ராவதியின் மகனும் சாம்புலாவின் கணவருமான தபுண்டா செலேந்திரன் என்ற ஆட்சியாளரைப் பற்றி கல்வெட்டு கூறுகிறது. இந்தோனேசிய வரலாற்றாசிரியர் பேராசிரியர் முனைவர் போச்சாரி மாதரம் இராச்சியத்தில் ஆட்சி செய்த பிற்கால சைலேந்திரர்களின் மூதாதையர் தபுண்டா செலேந்திரா என்று பரிந்துரைத்தார்.

சாவக கெது சமவெளி

இரண்டு கல்வெட்டுகளும் சுமார் 7 ஆம் நூற்றாண்டில் நடு சாவகத்தின் வடக்கு கடற்கரையில், ஒரு காலத்தில் இந்து சைவத்துவ இராச்சியமாக செழித்தோங்கி இன்று கலிங்க இராச்சியம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தியெங் பீடபூமியின் இந்துக் கோயில்கள், கெடாங் சோங்கோ கோயில்கள் போன்ற வடக்கு சாவக மலைப்பகுதிகளில் சில பழமையான சாவக கோயில்கள் காணப்படுகின்றன.

ஆனால் அவை பிற்காலத்தில், ஆரம்பகால மாதரம் இராச்சியத்தின் போது கட்டப்பட்டிருக்கலாம். மாதரம் இராச்சியத்தின் சைலேந்திரர்களின் தெற்கு நடு சாவக கெது சமவெளியில் பிற்கால இராச்சியம் செழித்தோங்க இந்த பழைய இராச்சியத்திற்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக வரலாற்றாசிரியர் பரிந்துரைத்தார்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads