கலிஞ்சர் கோட்டை

உத்திரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்திலுள்ள ஒரு கோட்டை From Wikipedia, the free encyclopedia

கலிஞ்சர் கோட்டை
Remove ads

கலிஞ்சர் (Kalinjar) (Hindi: कालिंजर) கோட்டை நகரம், இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில், புந்தேல்கண்ட் பகுதியில், உலகப் பாரம்பரிய களமான கஜுராஹோ அருகில் உள்ள பாந்தா மாவட்டத்தில் 1203 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கருங்கற்களாலான கலிஞ்சர் கோட்டை 1.6 கி. மீ. நீளமும், 0.8 கி. மீ. அகலமும், 30 முதல் 35 மீட்டர் உயரமும், 8 மீட்டர் கனமும் கொண்டது.[1]

விரைவான உண்மைகள் கலிஞ்சர் கோட்டை, வகை ...
விரைவான உண்மைகள்

கலிஞ்சர் கோட்டையை ஆண்டவர்களில் மத்திய இந்தியாவின் ராஜபுத்திர சந்தேலர்களும், ரேவாவின் சோலாங்கி வம்சத்தவர்களும் முக்கியமானவர்கள். கி. பி. 3 – 5 நூற்றாண்டில் குப்த குலத்தினர் கலிஞ்சர் கோட்டையில் பல கோயில்கள் கட்டினர்.

Remove ads

வரலாறு

கஜினி முகமது 1019 மற்றும் 1022ஆம் ஆண்டுகளில் கலிஞ்சர் கோட்டையை தாக்கி கைப்பற்ற இயலாது திரும்ப நேரிட்டது.[2] ஆனால் 1526ஆம் ஆண்டில் மொகலாய மன்னர் பாபர் கலிஞ்சர் கோட்டையை கைப்பற்றினார். சேர் சா சூரி 1545இல் கலிஞ்சர் கோட்டையை கைப்பற்றும் போரில் மாண்டார். இக்கோட்டையை 1812இல் பிரித்தானிய இந்தியப் பேரரசு கைப்பற்றியது. சிப்பாய் கலவரத்தின் போது கலிஞ்சர் கோட்டை முக்கிய பங்கெடுத்தது.

போக்குவரத்து வசதிகள்

  • விமான நிலையம்: 130 கி. மீ. தொலைவில் உள்ள கஜுரஹோ விமான நிலையம்
  • இரயில் நிலையம்: 36 கி. மீ. தொலைவில் உள்ள அட்டாரா இரயில் நிலையம் அல்லது 57 கி. மீ. தொலைவில் உள்ள பாந்தா இரயில் நிலையம்.
  • பேருந்து வசதி: சித்ரகூடம், பாந்தா, அலகாபாத் ஆகிய இடங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads