கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Kaloji Narayana Rao University of Health Sciences) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் நகரில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் கவிஞரும் தெலங்காணாவின் அரசியல் ஆர்வலருமான கலோஜி நாராயண ராவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

தெலங்காணா மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. எனவே, ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தெலங்காணா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, தெலங்காணா அரசு "கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்" என்ற புதிய பல்கலைக்கழகத்தை நிறுவியது. இதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 7 ஆகத்து 2016 அன்று முறைப்படி அடிக்கல் நாட்டினார். இப்பல்கலைக்கழகம் தெலங்காணா மருத்துவக் கல்லூரிகளின் மறு இணைப்புடன் சூன் 2016 முதல் செயல்படத் தொடங்கியது.[1][2]

Remove ads

சேர்க்கை மற்றும் படிப்புகள்

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது சேர்வதற்கான விண்ணப்பதாரரின் நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத் தேர்வு) தரவரிசை மற்றும் பிற துணை மருத்துவ மற்றும் மருந்தியல் படிப்புகளுக்கான இஏஎம்சிஈடி தரவரிசை அடிப்படையிலும் நடைபெறுகிறது.

இணைவுபெற்ற கல்லூரிகள்

அரசு கல்லூரிகள்

அரசு கல்லூரிகளில் 1250 மருத்துவ இடங்கள் உள்ளன. குறிப்பிடத்தக்கக் கல்லூரிகள்:

  • உஸ்மானியா மருத்துவக் கல்லூரி, ஐதராபாத்
  • காந்தி மருத்துவக் கல்லூரி, ஐதராபாத்
  • காகடியா மருத்துவக் கல்லூரி, வாரங்கல்
  • ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம், அடிலாபாத்
  • அரசு மருத்துவக் கல்லூரி, நிஜாமாபாத்
  • அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர்
  • அரசு மருத்துவக் கல்லூரி, சித்திப்பேட்டை

தனியார் கல்லூரிகள்

தனியார் கல்லூரிகளில் 2250 இடங்கள் உள்ளன.

  • துர்காபாய் தேஷ்முக் இயன்முறை கல்லூரி, ஐதராபாத்
  • டெக்கான் மருத்துவ அறிவியல் கல்லூரி, ஐதராபாத்
  • சதன் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஐதராபாத்
  • காமினேனி மருத்துவ அறிவியல் நிறுவனம், நர்கெட்பல்லி
  • மகேசுவரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பதஞ்செரு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads