டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Dr. NTR University of Health Sciences-NTUHS ; IAST : Ḍā. En. ஷி. ஆர். ஆரோக்யசாஸ்திர விஸ்வவித்யாலயமு), என்பது, முன்னர் ஆந்திரப் பிரதேச சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் , விஜயவாடா நகரில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

இதன் நிறுவனர் மற்றும் முதல் வேந்தருமான, முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. ராமராவ் நினைவாகப் பெயரிடப்பட்டது.

Remove ads

வரலாறு

இந்தப் பல்கலைக்கழகம் ஆந்திரப் பிரதேச அரசால் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இதனை ஏப்ரல் 9, 1986 அன்று மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த என். டி. ராமராவ் திறந்து வைத்தார். ராமராவ் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக இருந்தார்.[2] ராமா ராவ் மரணத்தைத் தொடர்ந்து, அரசின் உத்தரவின்படி "சுகாதார அறிவியல்” பல்கலைக்கழகம் என்பது டாக்டர் என். டி. ஆர். பல்கலைக்கழகம் எனப் பிப்ரவரி 1998-ல் பெயரிடப்பட்டது.[3] இப்பல்கலைக்கழகம் வெள்ளி விழாவை 2011 நவம்பர் 1 முதல் 3 வரை கொண்டாடியது.[4]

Remove ads

வசதிகள்

நூலக வலையமைப்பில் இயங்கும் நூலகம் மற்றும் கணினி மையம் உள்ளது. ஆசிரியர்கள், தேர்வாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பல்வேறு வகை தங்குமிடங்களுடன் விருந்தினர் மாளிகை உள்ளது. தேர்விற்காகத் தனிப் பிரிவானது தனிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குச் சிறப்பு பாதுகாப்பு மின்னணு அணுகலைக் கட்டுப்பாடு முறையில் செயல்படுகிறது. இதனை அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மட்டுமே செயல்படுத்த முடியும். உயிரியளவியல் அடிப்படையிலான மின்னணு வருகை முறையும் நிறுவன ரீதியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Remove ads

மாணவர் சேர்க்கை மற்றும் படிப்புகள்

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத் தேர்வு) தரவரிசையின் அடிப்படையில் நடைபெறுகிறது. மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளுக்கு பொறியியல், விவசாயம், மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தரவரிசையின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

இப்பல்கலைக்கழகம் நவீன மருத்துவத்தில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டங்கள், பட்டயம் மற்றும் சிறப்பு மருத்துவ படிப்புகளை நடத்துகிறது. பல் அறுவை சிகிச்சை, செவிலியம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யூனானி ஆகியவற்றில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள்; இயற்கை மருத்துவம், உடலியக்க மருத்துவம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதுநிலை பட்டப் படிப்புகள், பயன்பாட்டு ஊட்டச்சத்தில் முதுநிலை படிப்பும் உள்ளன.

பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதிலிருந்து இதனுடன் இணைந்த கல்லூரிகளின் எண்ணிக்கை இருபத்தி ஏழிலிருந்து 184ஆக உயர்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டங்கள் இந்திய மருத்துவ கழகம், இந்தியப் பல் மருத்துவ மன்றம், இந்திய மருத்துவ மத்திய மன்றம், மத்திய ஓமியோபதி மன்றம் மற்றும் இந்திய செவிலிய மன்றம் உள்ளிட்ட தொழில்முறை சட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இணைவுபெற்ற நிறுவனங்கள்

அரசுக் கல்லூரிகள்

தனியார் கல்லூரிகள்

  • அல்லூரி சீதாராம ராஜு மருத்துவ அறிவியல் நிறுவனம், ஏலுரு
  • மகாராஜா மருத்துவ அறிவியல் நிறுவனம், விஜயநகரம்
  • என்ஆர்ஐ மருத்துவ அறிவியல் நிறுவனம், விசாகப்பட்டினம்
  • என்ஆர்ஐ மருத்துவக் கல்லூரி, குண்டூர்
  • பிபி சித்தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விஜயவாடா
  • டாக்டர் பின்னம்மனேனி சித்தார்த்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, விஜயவாடா
  • பாத்திமா மருத்துவ அறிவியல் நிறுவனம், கடப்பா
  • காயத்ரி வித்யா பரிஷத் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம், விசாகப்பட்டினம்
  • ஜிஎஸ்எல் மருத்துவக் கல்லூரி, ராஜமுந்திரி
  • கிரேட் ஈஸ்டர்ன் மருத்துவப் பள்ளி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீகாகுளம்
  • கத்தூரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குண்டூர்
  • கோணசீமா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, அமலாபுரம்
  • நாராயணா மருத்துவக் கல்லூரி, நெல்லூர்
  • நாராயணா செவிலியர் கல்லூரி, நெல்லூர்
  • நிம்ரா மருத்துவ அறிவியல் நிறுவனம், இப்ராஹிம்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம்
  • ஸ்ரீ நாராயண செவிலியர் கல்லூரி, நெல்லூர்
  • பிஇஎஸ் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குப்பம்
  • சாந்தி ராம் மருத்துவக் கல்லூரி, நந்தியால்
  • விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரி கர்னூல்
Remove ads

ஆய்விதழ்

பல்கலைக்கழகம் டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் காலாண்டு ஆய்விதழ் ஒன்றை வெளியிடுகிறது. இது இலவச, திறந்த அணுகல் இதழாகவும் இணையத்திலும் அச்சிலும் கிடைக்கிறது. முதல் இதழ் 21 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது.[5]

துணைவேந்தர்கள்

  1. கே.என்.ராவ் (1986-1988)
  2. எல். சூர்யநாராயணா (1988-1994)
  3. சி.எஸ்.பாஸ்கரன் (1994 - 1997)
  4. ஜி.ஷாம்சுந்தர் (1997-2004)
  5. ஆர். சாம்பசிவ ராவ் (2004-2007)
  6. பி.வி.ரமேஷ் (2007-2007)
  7. ஏ.வி.கிருஷ்ணம் ராஜு (2007-2010)
  8. ஐ. வி. ராவ் (2010-2014)
  9. டி.ரவி ராஜு (2014-2017)
  10. சி.வி.ராவ் (2017-2019)
  11. சியாம பிரசாத் பிஜிலம் (2019 முதல்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads