கல்மாஷபாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்மாஷபாதன் கதை (சமசுகிருதம்: कल्माषपाद) பண்டைய இந்தியாவின் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை ஆண்ட இச்வாகு வம்சத்தின் சூரிய குல மன்னர் கல்மாஷபாதன், வசிட்டரின் மகன் சக்தி முனிவரை வழிமறித்து தீண்டியதன் பேரில் ஏற்பட்ட சாபத்தால் அம்மன்னன் மனித மாமிசம் உண்ணும் அரக்கனாக மாறினார்.[1]
கல்மாஷபாதன் தனது ராணியுடன் உடலுறவு கொண்டால் மரணமடைவார் என்று பல நூல்கள் விவரிக்கின்றன. எனவே கல்மாஷபாதனுக்கான, வசிட்டர் மன்னர் கல்மாஷபாதனின மனைவி நியோகாவுடன் கூடி அஸ்மகன் எனும் ஒரு மகனைப் பெற்றுக்கொடுத்தார். இது ஒரு புராதன பாரம்பரியமாகும். இதன் மூலம் ஒரு கணவன் தனது மனைவியைக் கருவுறுதலுக்கு மற்றொரு ஆணுக்கு பரிந்துரைக்கலாம். கல்மாஷபாதானின் கதையானது உன்னதமான காவியங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணம் மற்றும் புராணங்கள் உட்பட பல்வேறு படைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
Remove ads
விளக்கம்
மகாபாரதமும், புராணங்களும் கல்மாஷபாதன் மன்னன் சுதாசனின் மகன் என்பதை ஒப்புக்கொள்கின்றன; இருப்பினும் இராமாயணம் கல்மாஷ்பாதனின் தந்தையை ரகு என்று பெயரிடுகிறது. கல்மாஷபாதனின் முன்னோர்கள் என சகரர் மற்றும் பகீரதன் ஆகியோரை அனைத்து நூல்களும் ஒப்புக்கொள்கின்றன. நளன்-தமயந்தி சமகால மன்னரான ரிதுபர்ணனின் மகன் கலமாஷபாதன் என்று பத்ம புராணம் கூறுகிறது (நளன்-தமயந்தி கதையில் கல்மாஷபாதன் ஒரு பாத்திரமும் கூட)[2][3].
Remove ads
சக்தி மகரிஷியின் சாபம்
மகாபாரதத்தின்படி, ஒருமுறை மன்னர் கல்மாஷபாதன் வேட்டையாடுவதற்காக காட்டில் ஒரு குறுகிய பாதையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வசிட்டரின் மூத்த மகனான சக்தி மகரிசிக்கு வழி விட மறுத்ததுடன், இராட்சசன் போல் அரக்கத்தனமாக கசை அடி கொடுத்தான். இதனால் கோபமுற்ற சக்தி ரிஷி மன்னர் கல்மாசபாதனை மனித சதையை உண்டு வாழும் இராட்சசன் போல் 16 ஆண்டுகள் காட்டில் அலையுமாறு சாபமிடுகிறார்.
அப்பக்கம் வந்தமுனிவர் விசுவாமித்திரர், வசிட்டரின் மகன்களை பழிவாங்க வேண்டி, கல்மாஷபாதனின் உடலில் ஒரு இராட்சதனை ஏவினார். காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒரு பிராமணர் மன்னர் கல்மாஷபாதனை அணுகி, உண்ண உணவு வேண்டினார். கல்மாஷபாதன் அரண்மனை சென்று, ஒரு காவலர் மூலம், கானகத்தில் உள்ள பிராமணருக்கு மனித இறைச்சி கொண்ட கறியும், அரிசி உணவும் அனுப்பி வைத்தார்.
பிராமணர் தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டு, உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்து, கோபத்தால் இது போன்ற உணவை அனுப்பி வைத்தவன் இதே போன்ற உணவை விரும்புவனாக மாறி, பாவியாக உலகம் முழுவதும் சுற்றி திரியட்டும் என சாபமிட்டார். இதனால் மன்னர் கல்மாஷபாதன் உடனே இராட்சச மனநிலை கொண்டு, விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான். சிறிது காலம் கழித்து தனக்கு முதலில் சாபமிட்ட சக்தி மகரிசியை கொன்று, மன்னர் கல்மாஷபாதன் மனித இறைச்சியை உண்ணத் துவங்கினார். பின்னர் மீதமிருந்த வசிட்டரின் 99 மகன்களையும் கல்மாஷபாதன் கொன்று தின்றார்.[4] கவலையுடன் குடிலுக்குத் திரும்பிய வசிட்டர் தனது மூத்த மருமகள் அதிருசியந்தி கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்தார். அந்நேரத்தில் வசிட்டரை கொன்று உண்பதற்கு விரைவாக வந்த கல்மாஷபாதன் மீது புனித நீரைத் தெளித்து, மந்திரங்களைச் சொல்லி, அவரைக் அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார். கல்மாஷபாதன் தனக்கு வசிட்டரைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும் என வசிட்டரை வேண்டினார்.
கல்மாஷ்பாதருடன் அயோத்தி சென்றார் வசிட்டர். கல்மாஷபாதன் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் கல்மாஷபாதனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்தது. எனவே மன்னர் கல்மாஷபாதனின் வேண்டுகோளுக்கு இணங்க, வசிட்டர் கல்மாஷ்பாதனின் அரசி மதயந்தியுடன் கூடி ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்தார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads