களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

விரைவான உண்மைகள் களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில், வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள களக்காடு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் சத்தியவாகீசுவரர் ஆவார். இறைவி கோமதியம்மாள் ஆவார். [1]

அமைப்பு

ஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும், இசைத்தூண்களும் காணப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads