கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்

கிள்ளான் துறைமுகம் கஸ்தாம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்
Remove ads

கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Jalan Kastam Komuter Station; மலாய்: Stesen Komuter Jalan Kastam); சீனம்: 关税路) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் துறைமுகம் கஸ்தாம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கஸ்தாம் சாலை Jalan Kastam, பொது தகவல்கள் ...

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம், கோலா கிள்ளான் நகரத்திற்கு மிக அருகில் உள்ளது.[2]

இந்த நிலையம் கஸ்தாம் சாலை புறநகர்ப் பகுதியின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.

Remove ads

பொது

கஸ்தாம் சாலை நிலையத்திற்கு அருகில் மலாயா தொடருந்து நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. தற்போது அந்தக் கிடங்கு பழைய தொடருந்து இயந்திரங்களைக் கிடத்தி வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அவை பின்னர் பழைய இரும்பு வணிகர்களிடம் அனுப்பப்படும்.[3]

கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் கோலா கிள்ளான் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கஸ்தாம் சாலை என்ற புறநகர்ப் பகுதியின் பெயரால் பெயரிடப்பட்டது.[4]

1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கஸ்தாம் சாலை நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads