தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்

From Wikipedia, the free encyclopedia

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
Remove ads

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அல்லது கிள்ளான் துறைமுக வழித்தடம் (ஆங்கிலம்: Tanjung Malim–Port Klang Line அல்லது Port Klang Line; மலாய்: Laluan Pelabuhan Klang அல்லது Laluan Tanjung Malim–Pelabuhan Klang) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.[1][2]

விரைவான உண்மைகள் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் வழித்தடம் Port Klang Line, கண்ணோட்டம் ...
Thumb
கிள்ளான் துறைமுக தொடருந்து வழித்தடம்

இந்த வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. கிள்ளான் துறைமுகம்; தஞ்சோங் மாலிம் ஆகிய இரு நகரங்களையும்; இந்த இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள 35 தொடருந்து நிலையங்களையும் இந்தச் சேவை இணைக்கின்றது.[3]

Remove ads

பொது

இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் கோலாலம்பூர் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன. 15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை பத்துமலை வரை இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

வரலாறு

கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) என்பது 1995-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்மயமாக்கப்பட்ட பயணிகள் இரயில் சேவையாகும் (Klang Valley Integrated Transit System). குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள பயணிகளுக்குப் பெரிதும் உதவியது.

கோலாலம்பூரில் பணிபுரியும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாநகரத்திற்குச் செல்ல முடியும் என்பதால், இது ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாக இருந்தது. பெட்டிகள் நவீனமாகவும் மற்றும் குளிரூட்டப் பட்டவையாகவும் இருந்தன.

சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதை

1886-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதையின் ஒரு பகுதியாக இந்தப் பாதை தொடங்கியது. நவீன கால சிரம்பான் பாதையானது 1895-இல் திறக்கப்பட்டது.[4]

கோலாலம்பூர் - கிள்ளான் இரயில் பாதையில் இருந்து சுல்தான் சாலை நிலையம் வழியாக, 1895-இல் சிரம்பானுக்குத் திறக்கப்பட்டது.[5]

1990-களின் முற்பகுதியில் ரவாங் - சிரம்பான் சேவையும்; செந்தூல் - கிள்ளான் துறைமுகச் சேவையும் மின்மயமாக்கப் பட்டன.

Remove ads

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

நிலையங்கள்

தஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களுக்கு இடையில் எந்தெந்த நிலையங்களில் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்துகள் நின்று செல்கின்றன எனும் விவரங்கள்:

நிலையக் குறியீடு நிலையத்தின் பெயர்
 KA15  தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்
 KA14  கோலா குபு பாரு தொடருந்து நிலையம்
 KA13  ராசா கொமுட்டர் நிலையம்
 KA12  பத்தாங்காலி கொமுட்டர் நிலையம்
 KA11  செரண்டா கொமுட்டர் நிலையம்
 KA10  ரவாங் தொடருந்து நிலையம்
 KA09  குவாங் கொமுட்டர் நிலையம்
 KA08  சுங்கை பூலோ தொடருந்து நிலையம்
 KA07  கெப்போங் சென்ட்ரல்
 KA06  கெப்போங் கொமுட்டர் நிலையம்
 KA05  சிகாம்புட் கொமுட்டர் நிலையம்
 KA04  புத்ரா கொமுட்டர் நிலையம்
 KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
 KA02  கோலாலம்பூர் தொடருந்து நிலையம்
 KA01   KS01  கோலாலம்பூர் சென்ட்ரல்
 KD01  அப்துல்லா உக்கும் நிலையம்
 KD02  அங்காசாபுரி கொமுட்டர் நிலையம்
 KD03  பந்தாய் டாலாம் கொமுட்டர் நிலையம்
 KD04  பெட்டாலிங் கொமுட்டர் நிலையம்
 KD05  டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம்
 KD06  கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம்
 KD07  செரி செத்தியா கொமுட்டர் நிலையம்
 KD08  செத்தியா ஜெயா நிலையம்
 KD09   KS02  சுபாங் ஜெயா நிலையம்
 KD10  பத்து தீகா கொமுட்டர் நிலையம்
 KD11  சா ஆலாம் கொமுட்டர் நிலையம்
 KD12  பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம்
 KD13  புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம்
 KD14  கிள்ளான் கொமுட்டர் நிலையம்
 KD15  தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம்
 KD16  தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்
 KD17  கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்
 KD18  கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்
 KD19  கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம்
Remove ads

தஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுக வழித்தடம்

Thumb
தஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுக வழித்தடம்

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads