காகஸ்நகர்

இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஒரு நதரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காகஸ்நகர் (Kagaznagar (earlier known as Sirpur Kagaznagar), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[4][5] இது மாவட்டத் தலைமையிடமான கொமாரம் பீம் எனும் அசிபாபாத்திற்கு கிழக்கில் 26.4 கிலோ மீட்டரும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடக்கே 304.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 174 மீட்டர் (574 அடி) உயரத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் காகஸ்நகர், நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13,630 வீடுகள் கொண்ட காகஸ்நகர் மக்கள் தொகை 57,583 ஆகும். அதில் ஆண்கள் 28,649 மற்றும் பெண்கள் 28,934 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,704 மற்றும் 718 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.85%, இசுலாமியர் 30.85%, பௌத்தர்கள் 1.12%, கிறித்தவர்கள் 1.24% மற்றும் பிறர் 0.94% ஆகவுள்ளனர்.[6]

Remove ads

போக்குவரத்து

சிர்புர் காகஸ்நகர் தொடருந்து நிலையம்[7] நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

பொருளாதாரம்

காகஸ்நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள சிர்பூர் பகுதியில் காகித ஆலைகள் அதிகம் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads