கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம்
Remove ads

கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் (Komaram Bheem Asifabad district), இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். இப்புதிய மாவட்டம் அக்டோபர் 2016-இல் துவக்கப்பட்டது.[2] இதன் தலைமையிட நகரம் கொமாரம் பீம் ஆகும். இம்மாவட்டம் ஆதிலாபாத் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாகத் துவக்கப்பட்டது. [3]

விரைவான உண்மைகள் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம், நாடு ...
Thumb
கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் வருவாய்க் கோட்டங்கள்
Thumb
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
Remove ads

புவியியல்

கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டம் மற்றும் கட்சிரோலி மாவட்டங்களும், தெற்கில் மஞ்செரியல் மாவட்டமும், மேற்கில் ஆதிலாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் பெஜ்ஜூர் மற்றும் சிர்பூர் காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலிகள் காணபபடுகிறது.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 5,15,835 ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் அசிபாபாத் மற்றும் ககாஸ்நகர் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 15 வருவாய் வட்டங்களையும்[4] கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் வ. எண், கொமாரம் பீம் அசிபாபாத் வருவாய்க் கோட்டம் ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads