காக்ரா ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்ரா ஆறு அல்லது கர்னாலி ஆறு (Ghaghara or Karnali) (நேபாளி: कर्णाली Karṇālī [kʌrˈnɑːliː]; இந்தி: घाघरा Ghāghrā [ˈɡʱɑːɡrɑː]; Chinese: 加格拉河) இமயமலையின் திபெத் பகுதியில் அமைந்த சிவாலிக் மலையின் 3962 மீட்டர் உயரத்தில் உள்ள மாப்சாசுங்கோ கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகி, மானசரோவர் வழியாக நேபாளத்தை அடைந்து, பின் இந்தியாவை வந்தடைந்து, பிகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னா அருகே கங்கை ஆற்றில் கலக்கிறது. நேபாளத்தில் 507 கிலோ மீட்டர் நீளம் பாயும் காக்ரா ஆற்றின் மொத்த நீளம் 1080 கிலோ மீட்டராகும். இதன் மொத்த வடிநிலப் பரப்பு 1,27,950 சதுர கிலோ மீட்டராகும்.[1] கங்கை ஆற்றின் நீண்ட துணை ஆறுகளில் யமுனை ஆற்றுக்கு அடுத்து காக்ரா ஆறு இரண்டாவதாக உள்ளது.
Remove ads
துணை ஆறுகள்
காக்ரா ஆற்றின் 9 துணை ஆறுகள்; பேக்ரி ஆறு, சர்ஜு ஆறு, குவுவானா ஆறு, மேற்கு ரப்தி ஆறு,சோட்டி கண்டகி ஆறு, சேத்தி ஆறு, தகாவார் ஆறு, மகாகாளி ஆறு மற்றும் புத்தி கங்கை ஆறுகளாகும்.
நீர் மின் ஆற்றல்
நேபாளத்தில் பாயும் காக்ரா ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டி 900 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேபாளத்தில்
நேபாளத்தில் காக்ரா ஆறு டோப்லா மாவட்டம், ஹும்லா மாவட்டம், ஜும்லா மாவட்டம், காளிகோட் மாவட்டம் மற்றும் முகு மாவட்டம் என ஐந்து மாவட்டங்களின் வழியாக பாய்கிறது.[2]
இந்தியாவில்
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஆசம்கர் மாவட்டம், பாராபங்கி மாவட்டம், பஸ்தி மாவட்டம், பகராயிச் மாவட்டம் , திவோரியா மாவட்டம், பைசாபாத் மாவட்டம் , கோண்டா மாவட்டம், கோரக்பூர் மாவட்டம், சந்து கபீர் நகர் மாவட்டம், ஜவுன்பூர் மாவட்டம், லக்கிம்பூர் கேரி மாவட்டம், சீதாப்பூர் மாவட்டங்கள் மற்றும் பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டம் மற்றும் சிவான் மாவட்டம் வழியாக பாயும் காக்ரா ஆறு சிவான் மாவட்டத்தின் தோரிகஞ்சி என்ற இடத்தில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.
Remove ads
படக்காட்சியகம்
- காக்ரா ஆறு உற்பத்தியாகுமிடம்
- காக்ரா ஆறு உற்பத்தியாகுமிடத்தின் அருகில் உள்ள மானசரோவர் ஏரி
- பைசாபாத்தில் காக்ரா ஆறு
- சீதாப்பூரில் காக்ரா ஆறு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads