அயோத்தி மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அயோத்தி மாவட்டம்map
Remove ads

அயோத்தி மாவட்டம் முன்னர் இதன் பெயர் பைசாபாத் மாவட்டம் என இருந்தது. பைசாபாத் மாவட்டத்தின் பெயரை, அயோத்தி மாவட்டம் என மாற்றப்படுவதாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் 6 நவம்பர் 2018 அன்று அறிவித்தார்.[1][2][3][4][5][6] [7][8][9]

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...

அயோத்தி கோட்டத்தில் அமைந்த அயோத்தி மாவட்டத்தின் தலைமையகம் சரயு ஆற்றின் கரையில் அமைந்த அயோத்தி மாநகராட்சியில் உள்ளது. இந்த மாவட்டம் 2,522 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் அயோத்தி நகரில் இராமர் பிறந்த இடம் அமைந்துள்ளது. மேலும் பாபர் மசூதி இருந்தது. அயோத்தி மாவட்டத்தின் பெரிய நகரமான பைசாபாத் நகரத்தில் டாக்டர். இராம் மனோகர் லோகிய அவத் பல்கலைகழகம் அமைந்துள்ளது.

Remove ads

மக்கள் தொகை

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 24,70,996 மக்கள் வாழ்ந்தனர். அதில் ஆண்கள் 12,59,628 மற்றும் பெண்கள் 12,11,368 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,60,082 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.73% ஆகவுள்ளது. அயோத்தி மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 20,94,271 (84.75%), இசுலாமியர்கள் 3,65,806 (14.80%) மற்றும் பிற சமயத்தவர்கள் 0.45% ஆக உள்ளனர்.[10] அயோத்தி மாவட்ட மக்கள் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

2522 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அயோத்தி மாவட்டம், 5 வருவாய் வட்டங்களும், 11 ஊராட்சி ஒன்றியங்களையும், 2 மாநகராட்சிகளையும், 1272 கிராமங்களையும் கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்

  1. சதர் வட்டம்
  2. சோகாவால் வட்டம்
  3. பிகாப்பூர் வட்டம்
  4. மில்க்கிபூர் வட்டம்
  5. ருதௌலி வட்டம்

மாநகராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

அயோத்தி மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:

  1. மசோதா
  2. சோகாவால்
  3. பிகாப்பூர்
  4. மில்க்கிபூர்
  5. மாயாபஜார்
  6. பூராபஜார்
  7. ஹரிசிங்டோன்கஞ்ச்
  8. அமனிகஞ்ச்
  9. தருண்
  10. மாவாய்
  11. ருதௌலி
Remove ads

கல்வி

போக்குவரத்து

தொடருந்து வசதிகள்

பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்

6 நடைமேடைகளுடன் கூடிய பைசாபாத் தொடருந்து நிலையம் கான்பூர், லக்னோ, வாரணாசி, அலகாபாத், மும்பை, தில்லி, கொல்கத்தா நகரங்களுடன் இணைக்கிறது. [11]

அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம்

3 நடைமேடைகளுடன் கூடிய அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம், கோரக்பூர், கான்பூர், லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, ஆசான்சோல், கொல்கத்தா, கவுகாத்தி, அமிர்தசரஸ், மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது. [12]

வானூர்தி நிலையம்

Remove ads

ஆன்மிகத் தலங்கள்

இதனையும் காண்க

மேகோள்கள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads