கொங்கோ குடியரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொங்கோ குடியரசு (அல்லது காங்கோ குடியரசு) (Republic of the Congo, பிரெஞ்சு: République du Congo) என்பது ஆப்பிரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள நாடு. ஒரு முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான இது கொங்கோ-பிரசாவில், or கொங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. கொங்கோ குடியரசின் எல்லைகளில் காபோன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, அங்கோலா மற்றும் கினி வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. 1960 இல் விடுதலை அடைந்த பிற்பாடு முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான மத்திய கொங்கோ, கொங்கோ குடியரசாகியது. கால் நூற்றாண்டு காலமாக ஒரு மார்க்சிய நாடாக இருந்த கொங்கோ குடியரசு 1990 இல் மார்க்சியத்தைக் கைவிட்டது. 1992 இல் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. 1997 இல் சிறிது காலம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த பின்னர் முன்னாள் மார்க்சிய அதிபர் டெனிஸ் நியூவெஸ்சோ (Denis Sassou Nguesso) பதவிக்கு வந்தார்.[1][2][3]

Remove ads
வெளி இணைப்புகள்
- ஆல்ஆப்பிரிக்கா.கொம்
- சிஐஏ தரவு நூல் பரணிடப்பட்டது 2020-08-31 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads