காசிட்டு மக்கள்

From Wikipedia, the free encyclopedia

காசிட்டு மக்கள்
Remove ads

காசிட்டு மக்கள் (Kassites) (கிமு 1531 — 1155) பண்டைய அண்மை கிழக்கில், பழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள்.[1]

விரைவான உண்மைகள் பாபிலோனியாவின் காசிட்டு வம்சம், தலைநகரம் ...
Thumb
காசிட்டுகளின் இராச்சியம் உள்ளடக்கிய கிமு 1400ல் பண்டைய அண்மை கிழக்கு
Thumb
கிஷ்
கிஷ்
சிப்பூர்
சிப்பூர்
துர் - குரிகல்சு
துர் - குரிகல்சு
தற்கால ஈராக்கில் காசிட்டுகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களின் வரைபடம்]](clickable map)

1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர்.[2][3]

இராணுவ பழங்குடி மக்களான காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கினாலும், உள்ளூரில் செல்வாக்கு பெற இயலவில்லை.[4] காசிட்டு வம்சத்தின் 500 ஆண்டு ஆட்சியில் பாபிலோனிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர்.[3] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[4]

Remove ads

வரலாறு

காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள், குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர்.[5][6]

அம்முராபியின் மகன் ஆட்சியில் கிமு 18ம் நூற்றாண்டில் பாபிலோனியா எதிரிகளால் தாக்கப்படும் போது, காசிட்டு மக்கள் பாபிலோனில் குடியேறினர். கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்டைட்டு பேரரசால் அழிந்த பின்னர், காசிட்டு மக்கள் துர் - குரிகல்சு நகரத்தை நிறுவி, 1531ல் காசிட்டு வம்ச ஆட்சியை மெசொப்பொத்தேமியாவில் நிறுவி, தற்கால ஈராக் மற்றும் ஈரானின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பாபிலோனியாவை ஆண்ட காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆட்சியாளர், ஆட்சிக் காலம் ...
Remove ads

பண்பாடு, மொழி, சமூகம், சமயம்

பாபிலோனியப் பெயர்களை காசிட்டு வம்ச மன்னர்கள் சூட்டிக் கொண்டாலும், காசிட்டு மக்களின் பழங்குடி மரபுப்படி வாழ்ந்தனர். காசிட்டு மக்கள் தங்கள் குலமரபை போற்றினர்.[7]

மித்தானி இராச்சிய மக்கள் போன்று காசிட்டு மக்கள், இந்திய-ஐரோப்பிய மொழியை பேசினர்.[3]

காசிட்டு வம்சத்தின் இறுதி எட்டு மன்னர்கள் காலத்தில், காசிட்டு மக்கள் அக்காதியம் மொழி பேசினர். காசிட்டு மக்கள் அசிரியர்களுடன் திருமண உறவு பூண்டனர்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads