கிர்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிர்சு (Girsu), தற்கால ஈராக் நாட்டின் தி கார் மாகாணத்தில் பண்டைய உபைது காலத்தில் (கிமு 5300-4800) நிறுவப்பட்ட பண்டைய நகரம் ஆகும். துவக்க வம்ச காலம் (கிமு 2900-2335) மற்றும் மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் (கிமு 2112-2004) பண்டைய கிர்சு நகரம் சிறப்புற்று விளங்கியது. லகாசு இராச்சியத்தை ஆண்ட மன்னர் குடியா ஆட்சிக் காலத்தில் (கிமு 2144-2124) கிர்சு நகரம் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கிர்சு நகரம் மத மையமாக மாறியது. மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் கிர்சு நகரம் முக்கிய நிர்வாக மையமாக விளங்கியது. மூன்றாவது ஊர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிர்சு நகரத்தின் முக்கியத்துவம் குறைந்தது.
Remove ads
வரலாறு

உபைதுகள் காலத்திலிரந்து (கிமு 5300-4800) கிர்சு நகரத்தில் மக்கள் குடியேறத் துவங்கியதாக கருதப்படுகிறது. துவக்க வம்ச காலத்திலிருந்து (கிமு 2900-2335) கிர்சு நகரம் முக்கியத்துவம் பெறத் துவங்கியது. லகாசு இராச்சிய மன்னர் குடியா காலத்தில் கிர்சு நகரம் லகாசு இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. பின்னர் தலைநகரை லகாசு]விற்கு மாற்றிய பிறகு கிர்சு நகரம் சமயத் தலைநகராக விளங்கியது.[2] மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் கிர்சு நகரம் நிர்வாக மையமாக விளங்கியது. மூன்றாவது ஊர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிர்சு நகரம் தன் செல்வாக்கை இழந்து, கிமு இரண்டாம் நூற்றாண்டில் முற்றிலும் சிதைந்து போனது. கிர்சு நகரத்தில் கிமு நான்காம் நூற்றாண்டின் கிரேக்க-அரமேய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[3]
Remove ads
தொல்லியல்
பண்டைய கிர்சு நகரத்தின் தொல்லியல் மேடு இரண்டு முக்கிய மேடுகளைக் கொண்டுள்ளது. ஒன்று சமவெளியில் இருந்து 50 அடி உயரத்திலும், மற்றொன்று 56 அடி உயரத்திலும் உள்ளது. பல சிறிய குன்றுகள் அந்தத் தளத்தில் உள்ளது. கிபி 1877 மற்றும் 1900க்கு இடையிலும், பின்னர் 1903-1909 வரை கிர்சு தொல்லியல் களததில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.[4][5][6] இத்தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களில் ஒரு பெண்ணின் பளிங்குக் கல் சிலை, தங்க முலாம் பூசப்பட்ட செப்பு வளையல்கள் மற்றும் ஒரு பகுதி சுமேரிய கல்வெட்டுடன் செதுக்கப்பட்ட ஒரு கல் சிங்கத்தின் துண்டு ஆகியவை அடங்கும்.[9][10]
இதன் அகழ்வாராய்ச்சிகள் 1929-1931இல் ஹென்றி டி ஜெனூய்லாக் மற்றும் 1931-1933இல் ஆண்ட்ரே பரோட்டின் கீழ் தொடர்ந்தன.[7][8][9] கிர்சுவில் கழுகுகள் சிலைகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கிர்சு தொல்லியல் மேட்டிலிருந்து இருந்து சுமார் 50,000 ஆப்பெழுத்துகள் கொண்ட களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.[10]
பிரித்தானிய அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈராக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக கிர்சு தொல்லியல் மேட்டில் 2016ஆம் ஆண்டில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.[11][12] ஒரு அடித்தள பலகை மற்றும் ஆப்பெழுத்துகளால் பொறிக்கப்பட்ட கட்டிட கூம்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 2019இல் அரண்மனை மேட்டில் மன்னர் ஊர்-நிங்கிர்சுவின் கோவிலான ஈ-நின்னு கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் 2020இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 300க்கும் மேற்பட்ட உடைந்த சடங்கு பீங்கான் கோப்பைகள், கிண்ணங்கள், ஜாடிகள், விலங்குகளை பலியிடுதல் மற்றும் நிங்கிர்சுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சடங்கு ஊர்வலங்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட 5,000 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுப் பொருட்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.[13][14] எஞ்சியுள்ளவற்றில் ஒன்று பட்டையால் செய்யப்பட்ட கண்களைக் கொண்ட வாத்து வடிவ வெண்கலச் சிலை ஆகும்.[23] சிந்து சமவெளி நாகரிக காலத்திய எடைக் கற்களும் காணப்பட்டது. பிப்ரவரி 2023இல், பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் கெட்டி அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிர்சுவின் நிர்வாகப் பதிவுகளைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட ஆப்பெழுத்து களிமண் பலகைகள் கண்டுபிடித்தனர். சுமேரிய போர்க் கடவுளான நிங்கிர்சுவின் முதன்மை இடமான இ-நின்னு கோயிலை அகழ்வாராய்ச்சியின் போது அடையாளம் காணப்பட்டது.[15]
Remove ads
படக்காட்சிகள்
கிர்சு நகரத்தின் உபைது காலத்திய தொல்பொருட்கள் (கிமு 4700–4200)
கிர்சு நகரத்தில் உரூக் காலத்திய தொல்லியல் எச்சங்கள் (கிமு4000–3100)
- சுடுமண் குடுவை, கிமு 3500–2900, இலூவா அருங்காட்சியகம்
கிர்சு நகரத்தின் துவக்க வம்ச காலத்திய தொல்லியல் எச்சங்கள் (கிமு 3000)
- கிர்சு நகரத்தின் தங்க வளையல், கிமு 3000, இலூவா அருங்காட்சியகம்
- குடிமக்களுக்கு மாதந்தோறும் பார்லி தானியம் வழங்க வேண்டிய கணக்கீடு கொண்ட ஆப்பெழுத்து களிமண் பலகை, கிமு 2350, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads