துப்பாக்கி (திரைப்படம்)
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
துப்பாக்கி (Thuppakki) என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார்.[1][2] இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.[3][4]
Remove ads
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- விஜய் - ஜெகதீஷ்
- காஜல் அகர்வால் - நிஷா ஜெகதீஷ்
- சத்யன் - பாலாஜி
- கவுதம் கருப்
- அக்சரா கவுடா
- வித்யூத் ஜம்வால் - தீவிரவாதிகளின் தலைவன்
- ஜெயராம் - இரவிச்சந்திரன்
படப்பிடிப்பு
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் டிசம்பர் 5,2011 அன்று தொடங்கி[5] 35 நாட்கள் நடைபெற்று முடிந்தது.[6] இப்படத்தின் இறுதி சண்டைக் காட்சி 60 சண்டைப்பயிற்சி வீரர்களுடன் 7 காமிராக்கள் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.[7]
பிணக்குகள்
தலைப்பு பற்றிய பிணக்கு
தங்களின் கள்ள துப்பாக்கி என்ற படத்தின் தலைப்பு போல் இருப்பதால் துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த தடைவிதிக்குமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார்.[4][8]
இசுலாமியர்கள் குறித்த பிணக்குகள்
இத்திரைப்படம் இசுலாமியர்களை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி சில இசுலாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.[9][10][11] அதனைத் தொடர்ந்து விஜய் அரசிடம் திரைப்படத்தைப் பாதுகாக்கக் கூறி மனு தாக்கல் செய்தார்.[12] அதன்பின்னர் சர்ச்சைக்குறிய காட்சிகளுக்காக மன்னிப்புக் கோரிய பிறகு அக்காட்சிகள், படத்தில் இருந்து நீக்கப்பட்டன.[13] இத்தவறுக்கு பரிகாரமாக விஜய் ஒரு படத்தில் இசுலாமியராக நடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அறிவித்துள்ளார்.[14]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads