ஏ. ஆர். முருகதாஸ்

இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

ஏ. ஆர். முருகதாஸ்
Remove ads

அரு. முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]

விரைவான உண்மைகள் அரு. முருகதாஸ், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை

  • முருகதாஸ் இயற்பெயர் முருகானந்தம் இவர் கள்ளக்குறிச்சியில் பிறந்தார். தனது மேற்படிப்பை திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்து பெற்றார்.
  • அவர் தனது கல்லூரிப் பருவத்திலே தமிழ் திரை துறையின் மீது ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்தார்.
  • அந்த ஆர்வத்தின் வெளிபாடாக கல்லூரிப் காலத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, மேடை நாடகங்களில் நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
  • மேலும் அதற்கு முந்தைய சிறிய வயதான பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார்.
  • இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது திரையுலக வாழ்க்கையை எழுத்தாளர் கலைமணியிடம் உதவியாளராக ஆரம்பித்தார்.
  • அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

திரைப்பட வாழ்க்கை

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.[3]

Remove ads

பங்காற்றிய திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads