காட்டுமன்னார்கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்டுமன்னார்கோயில் (Kattumannarkoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். காட்டுமன்னார்கோயில் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியிலிருந்து கடலூர் 75 கி.மீ.; கிழக்கே சிதம்பரம் 25 கி.மீ.; வடக்கே பண்ருட்டி 100 கி.மீ.; மேற்கே ஸ்ரீமுஷ்ணம் 25 கி.மீ. விருத்தாசலம் 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.4 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 157 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,664 வீடுகளும், 27,294 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,589 மற்றும் 277 ஆகவுள்ளனர்.[5]
வரலாறு
காட்டுமன்னார்கோயில் வைணவத் தலமாகும். வைணவப் பெரியார்களான நாதமுனிகளும், அவரது மூதாதையரான ஆளவந்தாரும் தோன்றிய தலமாகும். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட முதலாம் பராந்தகனால் இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
Remove ads
பள்ளிகள்
- பருவதராஜ குருகுலம் மேல்நிலைப்பள்ளி
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- கலைமகள் (உதவிபெறும்) நடுநிலைப்பள்ளி
- கிழக்குப்பள்ளி
- ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி
வீராணம் ஏரி
காட்டுமன்னார்கோயில் நகரத்திற்கு அருகில் சோழர்களால் உருவாக்க பட்ட வீராணம் ஏரி உள்ளது. காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரை என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரியை வீரநாராயண ஏரி என குறிப்பிடப்பட்டிருக்கும்.
Remove ads
அருகில் உள்ள பேரூராட்சிகள் & ஊராட்சிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads