காணி மரநண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காணி மரநண்டு (Kani maranjandu) என்பது 2017-இல் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரநண்டு ஆகும்.[1] இது நாள் வரை இந்நண்டு கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][3]
இந்நண்டு வகைப்படுத்தப்பட்டுள்ள காணி என்னும் பேரினம் காணிக்காரர் என்னும் பழங்குடி இன மக்களைப் பெருமைப் படுத்தும் விதமாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] கண்டுபிடித்தவர்கள் இதனை நிலநண்டுக் குடும்பத்தில் வகைப் படுத்தி உள்ளனர்.[1]
Remove ads
பரவல்
காணி மரநண்டு கேரளாவின் திருவனந்தபுர மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகிறது. இது ஒரு அகணிய உயிரியாகும்.[4]
பண்புகள்
நிலநண்டுக் குடும்பத்தில் இந்த நண்டுகளின் சில தனித்த பண்புகளினால் இவை தனிப் பேரினமாக அறியப்படுகின்றன. இவற்றின் தனித்தன்மை வாய்ந்த மேலோடு, மிக நீண்ட கால்கள், அலவன் (=ஆண் நண்டு) நண்டின் வயிறு போன்றவை இப்பேரினத்திற்கே உரியன.[1][3] இந்நண்டுகள் தங்கள் வாழ்நாளை மரங்களிலேயே கழிக்கின்றன. நீர்த்தேவைக்கு மரப் பொந்துகளில் இருக்கும் மழைநீரை நம்பியுள்ளன.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads