பத்துக்காலிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்துக்காலிகள் (Decapoda) என்பவை ஓடுடைய கணுக்காலி துணைத்தொகுதியில் உள்ள மலக்கோஸ்டிரக்கா வகுப்பில் அடக்கிய வரிசை உயிரினங்களாகும். இந்த வரிசையில் கிரேபிஷ், நண்டுகள், கடல் நண்டுகள், கடல் மற்றும் நன்னீர் இறால் அடங்கியுள்ளன. பெரும்பாலான பத்துக்காலிகள் தோட்டி விலங்குகளாக உள்ளன. இந்த வரிசையில் சுமார் 2,700 பேரினங்களின் கீழ் 15,000 சிற்றினங்கள் உள்ளன. சுமார் 3,300 சிற்றினங்கள் புதைபடிவ இனங்களாக உள்ளன.[1] இவற்றில் பாதி உயிரினங்கள் நண்டுகள் மற்றும் இறால் வகைகளாகும் (சுமார் 3,000 இனங்கள்). அனோமுரா (ஹெர்மிட் நண்டுகள், பீங்கான் நண்டுகள், சிங்கி இறால் (சுமார் 2500 இனங்கள்) ஆகியவை மீதமுள்ளவற்றில் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. ஆரம்பகால புதைபடிவ பத்துக்காலிகள் டெவோனியன் காலபேலியோபேலிமான் ஆகும் . [2]
Remove ads
உடற்கூறியல்
பத்துக்காலிகளில் சுமார் 38 இணை உறுப்புகள் காணப்படுகின்றன.[3] பத்துக்காலி எனும் இந்தப் பெயரானது கிரேக்க வார்த்தையான δέκα (δέκα, deca- , "பத்து"), மற்றும் πούς / ποδός , -pod, "கால்") தோன்றியது. இந்த பத்து உறுப்புகள் கால்களாக கருதப்படுகின்றன. இவை மார்புகண்டத்தின் கடைசி ஐந்து கண்டங்களில் காணப்படும். இவைநடக்கும் கால்கள் எனப்படுகின்றன. பல பத்துக்காலிகளில், இவற்றில் ஓர் இணைக்கால்கள் நன்கு வளர்ச்சியடைந்து இடுக்கிப்போன்று காணப்படும். இவை கீலே என்று அழைக்கப்படுகின்றன. இந்த கால்கள் இடுக்கிக்கால்கள் (கெல்லிபீடுகள்) என அழைக்கப்படுகின்றன. இந்த நடக்கும்காளுக்கு முன்னால் மூன்று இணைதுருவுத்தாடை உதடுகள் உள்ளன. இவை உணவூட்டத்தில் உதவி புரிகின்றன. இதனுடைய தலைப்பகுதியில் ஐந்து இணை உறுப்புகள் உள்ளன. இவை வாயுறுப்புகள், உணர்கொம்பு, உணர்நீட்சி முதலியன. அடிவயிற்றில் மேலும் ஐந்து ஜோடி இணை உறுப்புகள் உள்ளன. இவை நீந்தும்கால்கள் என்று அழைக்கப்படுகின்றன. வால்கால்கள் என்று அழைக்கப்படும். கடைக் கண்டத்தில் ஓர் இணை உறுப்பு உள்ளது. இது வால்கூர்நீட்சியுடன் விசிறி போன்று காணப்படும்.[3]
Remove ads
வகைப்பாடு
பத்துக்காலிகளின் வகைப்பாடானது செவுள்களின் அமைப்பு, கால்கள் முதலியனவற்றோடு, இளம் உயிரிகளின் வளர்ச்சி முறைகளையும் உள்ளடக்கியது. இதன் அடிப்படையில் இந்த வரிசையானது இரு துணைவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை 1) டெண்ட்ரொபிராங்கிட்டா 2) பிலியோசிமெட்டா. டெண்ட்ரோபிராக்கிட்டாவில் இறால்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக வெள்ளை இறாலான லிட்டோபின்னேயஸ் செட்டிபெரஸா. பிற பிரிவுகள் பிலியோசிமெட்டாவில் உள்ளன. இந்த விலங்குகள் பெரும்பாலும் நீந்திச் செல்வதைக் காட்டிலும் நடந்தே (பிலிசிமேட்டா, ஸ்டெனோபோடிடே மற்றும் கரிடியா தவிர) செல்கின்றன. இவை ரெப்டாண்டியா எனும் சந்ததி பிரிவினைத் தோற்றுவிக்கின்றன[4]
இந்த வகைப்பாடானது டி கிரேவ் மற்றும் பலரது வகைப்பாடான சூப்பர் குடும்ப அடிப்படையில் அமைந்துள்ளது.[5]








வரிசை பத்துக்காலிகள் லேட்ரில்லே, 1802
- மேல்வரிசை டெண்டிரோபிராங்கியாட்டா பேட், 1888
- பின்னேயிடே ரஃபினெஸ்க்யூ, 1815
- செர்ஜெஸ்டாய்டியா டானா, 1852
- துணைவரிசை பெலியோசையிமேட்டா பர்கன்ரோட், 1963
- கீழ்வரிசை ஸ்டெனோபோடிடியா பேட், 1888
- கீழ்வரிசை கரிடியா டானா, 1852
- புரோகாரிடாய்டு சேசு & மேனிங், 1972
- கலாதியேகரிடோய்டியாவெரேஷ்சாக், 1997
- பாசிஃபாயோய்டியாடானா, 1852
- ஒப்லொபோரோயிடியே டானா, 1852
- அட்டியோயிடே டி கேன், 1849
- பிரேசிலாய்டியா கால்மன், 1896
- நெமடோகார்சினாய்டியாசுமித், 1884
- சாலிடோப்டோடியே வுட்-மேசன், 1874
- ஸ்டைலோடாக்டிலோய்டியா பேட், 1888
- காம்பிலோனோடோய்டியா சொலாட், 1913
- பாலேமோனாய்டியா ரஃபினெஸ்க்யூ, 1815
- ஆல்பியோய்டியா ரஃபினெஸ்க்யூ, 1815
- புரோசிசோயிடே ஓர்த்மேன், 1896
- பந்தலோயிடே ஹாவொர்த், 1825
- பைசோடோகரிடோய்டியா சேசு, 1940
- கிராங்கோனாய்டியா ஹாவொர்த், 1825
- கீழ்வரிசை அஸ்டாசிடியா லேட்ரெலி, 1802
- எனோப்லோமெடோபாயிடே டி செயிண்ட் லாரன்ட், 1988
- நெஃப்ரோபோய்டியா டானா, 1852
- அஸ்டகோய்டியா லேட்ரெலி, 1802
- பரஸ்டகோய்டியா கக்சிலி, 1879
- கீழ்வரிசை கிளைஃபீடியா வின்க்லெர், 1882
- கிளைஃபாய்டியா வின்க்லெர், 1882
- கீழ்வரிசை அக்சிடியா டி செயிண்ட் லாரன்ட், 1979b
- கீழ்வரிசை ஜெபிடியா டி செயிண்ட் லாரன்ட், 1979
- கீழ்வரிசை அச்செலேட்டா ஸ்கோல்ட்ஸ் & ரிக்டர், 1995
- கீழ்வரிசை பாலிகெலிடா ஸ்கோல்ட்ஸ் & ரிக்டர், 1995
- கீழ்வரிசை அனோமுரா மெக்லே, 1838
- ஏக்லாய்டியா டானா, 1852
- கேலத்தியாய்டியா சாமுவேல், 1819
- கிப்பாயிடியா லேட்ரெலி, 1825a
- ஹிரோஸ்டைலூடியா ஓர்த்மேன், 1892
- லித்தோய்டியா சாமுவேல், 1819
- லோமிசோயிடியா பெள்வியர், 1895
- பகுரோய்டியா லேட்ரெலி, 1802
- கீழ்வரிசை பிரக்கியூரா லின்னேயசு, 1758
- பிரிவு ட்ரோமியாசியா டீ கேன், 1833
- டுரோமியாயிடியா டீ கேன், 1833
- கோமோலோட்ரோமியோடியா அல்காக், 1900
- கோமோலோயிடியா டீ கேன், 1839
- பிரிவு இராணினோயிடா டீ கேன், 1839
- பிரிவு சைக்ளோடொரிப்போயிடா ஓர்த்மேன், 1892
- பிரிவு யூபிராக்கியூரா டி செயிண்ட் லாரன்ட், 1980
- துணைப்பிரிவு கெட்டிரோமெட்டா குயினாட், 1977
- ஏத்ரோய்டியா டானா, 1851
- பெல்லியோயிடே டானா, 1852
- பைத்தோகிரோயிடியா வில்லியம்சு, 1980
- காலப்போய்டியா டீ கேன், 1833
- கேன்கிராய்டியாலேட்ரெல்லி, 1802
- கார்பிலாய்டியா ஓர்த்மேன், 1893
- செரங்கோனோயிடியா ஓர்த்மேன், 1893
- கோரிஸ்டாய்டியா சாமுவேல், 1819
- டைராய்டியா செரினீ, 1965
- டோரிப்போயிடியா மெக்லே, 1838
- எரிபியோடியா மெக்லே, 1838
- ஜிகேர்சினுகோயிடியா ரத்பன், 1904
- கோனிபிளகோயிடியா மெக்லே, 1838
- கெக்சாபோடோயிடியா மையர்சு, 1886
- லுகோசியோய்டியா சாமுவேல், 1819
- மஜோய்டியா சாமுவேல், 1819
- ஓரித்திஓயிடியா டானா, 1852c
- பாலிகோயிடியா போவியர், 1898
- பார்த்தினோபாயிடியா மெக்லே,
- பில்லுமோனிடியா சாமுவேல், 1819
- போர்ட்டுனோயிடியா ரஃபினெஸ்க்யூ, 1815
- பொட்டோமொயிடியா ஓர்த்மேன், 1896
- சூடோதெல்பூசோயிடியா ஓர்த்மேன், 1893
- சூடோசியோய்டியா அல்காக், 1898
- ரெட்ரோப்ளுமாய்டடியா கில், 1894
- டிராபெசியாயிடே மையர்சு, 1886
- ட்ரைக்கோடாக்டிலோய்டியா எச். மில்னே-எட்வர்ட்சு, 1853
- சாந்தோய்டியா மெக்லே, 1838
- துணைப்பிரிவு தோரகோட்ரேமாடா கினோட், 1977
- கிரிப்டோகிராய்டியா பால்சன், 1875
- கிராப்சோயிடேயா மெக்லே, 1838
- ஓசிபோடோய்டியா ரஃபினெஸ்க்யூ, 1815
- பின்னோதெராய்டியா டே கேன், 1833
- துணைப்பிரிவு கெட்டிரோமெட்டா குயினாட், 1977
- பிரிவு ட்ரோமியாசியா டீ கேன், 1833
Remove ads
மேலும் காண்க
- அட்லாண்டிக் டிகாபோட் இனங்களின் பட்டியல்
- மலாக்கோஸ்ட்ராக்காவின் பைலோஜெனி
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads