காந்தாரா-அத்தியாயம் 1
2025-இல் வெளியான கன்னடத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தாரா: அத்தியாயம் 1 (Kantara: Chapter 1) என்பது என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி அதிரடித் திரைப்படம்.[6] இது கதம்பர் வம்ச[7] ஆட்சியின் போது நடந்த ஒரு கதையை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியிருக்கிறார். மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படத்தின் முன்பகுதியான இந்தக் கதை, முதல் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரியம் மற்றும் மூதாதையர் மோதலின் தோற்றத்தை ஆழமாக ஆராய்கிறது.[8][9] இப்படத்தில் இந்தப் படத்தில் ஜெயராம், ருக்மணி வசந்த் மற்றும் குல்சன் தேவையா ஆகியோருடன் “காடுபெட்டு சிவன்” பாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார்.
2023 நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டம் 27 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது [10] [11] விளம்பர பதாகையை கானி ஸ்டுடியோ வடிவமைத்துள்ளது. படத்திற்கு ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை பி. அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார்.
Remove ads
கதை
ஒலிப்பதிவு
காந்தாரா படத்திற்கு இசையமைத்த பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.[12]
வெளியீடு
காந்தாரா: அத்தியாயம் கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் அக்டோபர் 2, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[13][14][15]
இந்தப் படம் தற்போது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த நான்காவது கன்னட படமாகவும், 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது கன்னட படமாகவும் உள்ளது.
மேலதிக ஊடக சேவை
மேலதிக ஊடக சேவை நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ படத்தின் உரிமையை வாங்கியுள்ளது.[16] [17]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads