காமா (நகரம்)

From Wikipedia, the free encyclopedia

காமா (நகரம்)
Remove ads

ஹமா அல்லது காமா அல்லது கமா(அரபி: حماة Ḥamāh [ħaˈmaː], ஆங்கிலம்: Hama, Biblical Ḥamāth, "fortress") என்பது மேல் மத்திய சிரியாவில் உள்ள ஒரோண்டேசு நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது திமிஷ்குவிற்கு வடக்காக 213 km (132 mi) தொலைவிலும் கோம்சிற்கு வடக்காக 46 கிலோமீட்டர்கள் (29 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இது காமா பிரதேசத்தின் மாகாண தலைநகரமாகும். காமா 2009இன் மக்கள்தொகை மதிப்பீடின்படி 854,000 குடிகளைக் கொண்டுள்ளது. இது சிரியாவில் அலெப்போ, தமாசுகசு மற்றும் கோம்சுக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[2][3]

விரைவான உண்மைகள் காமா حماةHama, நாடு ...

இந்நகரம் தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தும் அதன் பதினேழு நோரியாக்களுக்காக புகழ்பெற்றது. இந்த நோரியாக்கள் கி.மு. 1100இற்கு முன்னரே கட்டப்பட்டதாகும்.

கடந்த தசாப்தங்களில், காமா நகரம் பாத்திசம் எதிர்ப்பை எதிர்ப்பதின் மையமாக அழைக்கப்பட்டுவந்தது. மிக குறிப்பாக முசுலீம் சகோதரத்துவத்தில் முக்கிய பங்காற்றியது. 1964ன் இசுலாமிய எழுச்சியின் தொடக்கத்தில் சிரிய இராணுவத்தால் இந்நகரம் சோதனையிடப்பட்டது, மற்றும் ஏப்பிரல் 1981, குறிப்பாக 1982இலும் சிரியாவின் இசுலாமிய எழுச்சியின் போது படுகொலை நடந்த இடமாகவும் காமா நகரம் கருதிக்கொள்ளப்படுகிறது. இப் படுகொலையில் கிட்டத் தட்ட 25,000 மக்கள் கொல்லப்பட்டனர். இப் படுகொலை காமா படுகொலை என வர்ணிக்கப்படுகிறது. மறுதடவை இந்நகரம் மோதல் தளமாக மாறியது சிரிய இராணுவம் மற்றும் எதிர்ப்பு படைகளின் மோதலின் போதாகும். காமா நகரம் 2011 மற்றும் 2012 நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரின் முக்கிய போர்க் களங்களில் ஒன்றாக விளங்கியது.

Remove ads

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்பநிலை வரைபடம் காமா ...

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி இது சூடான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.[5] காமாவின் உள்நாட்டு அமைவிடம் நடுனிலக்கடலிலிருந்து எந்த மென்மையான கரையோரத் தாக்கங்களையோ தென்றல் காற்றையோ பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் விளைவாகத்தான் அருகிலுள்ள கோம்சை விட சூடான வறண்ட காலநிலையை இந்நகரம் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், காமா, மாதம் ...
Remove ads

மக்கள் தொகையியல்

Thumb
ஒரு கிரேக்க மரபுவழி தேவாலயம்

ஜோசியா சி. ரச்செல்லின் கூற்றுப்படி 12ம் நூற்றாண்டில் காமாவின் மக்கள்தொகை 6,750 குடிகளாக இருந்துள்ளது.[6]
ஜேம்ஸ் ரெய்லி வரலாற்று மக்கள் தொகையை கணிப்பிட்டதன்படி:
1812- 30,000 (Burckhardt)
1830- 20,000 (Robinson)
1839- 30–44,000 (Bowring)
1850- 30,000 (Porter)
1862- 10–12,000 (Guys)
1880- 27,656 (Parliamentary Papers)
1901- 60,000 (Parliamentary Papers)
1902–1907 80,000 (Trade Reports)
1906- 40,000 (al-Sabuni)
1909- 60,000 (Trade Reports)[7]
1932இல் காமா பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது காமாவில் அண்ணளவாக 50,000 குடியிருப்பாளர்கள் இருந்தனர். 1960ன் மக்கள்தொகை அடிப்படையில் இங்கு 110,000 உள்ளூர்வாசிகள் காணப்பட்டனர். அதிகரித்துக்கொண்டே வந்த காமாவின் மக்கள்தொகை 1978இல் 180,000 குடியிருப்பாளர்களையும் 1994ல் 273,000 குடியிருப்பாளர்களையும் எட்டியது.[8] காமா பிரதேசத்தின் 1000 பிறப்புகளில் குழந்தை இறப்பு வீதம் 99.4 ஆகும்.[9] 2005ன் மக்கள் தொகை அடிப்படையில் 325,000 குடியிருப்பாளர்கள் காணப்பட்டனர்.[10]

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சுன்னி இசுலாம் மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அப்படியிருந்தும் காமாவின் சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருக்கின்றனர்.[10] காமா பிரெஞ்சு ஆட்சிக்காலத்திலிருந்தே மிகவும் பழமையை விரும்புகின்ற சுன்னி முசுலிம்களைக் கொண்ட நகரம் என அறியப்பட்டு வருகின்றது.[11]

Remove ads

பிரதான இடங்கள்

Thumb
The Orontes River and Norias of Hama
Thumb
Norias of Hama
Thumb
Norias of Hama

காமாவின் அதி பிரபலமான கண்ணைக் கவரும் இடங்களாக அமைவது பைசாந்தியப் பேரரசு காலத்தில் அமைக்கப்பட்ட காமாவின் 17 நோரியாஸ் ஆகும். ஒரொண்டேஸ் ஆற்றில் இது அமைந்துள்ளது. அவற்றின் விட்டம் 20 மீட்டர்கள் (66 அடி) ஆகும். அல்-மமுன்யே (1453, al-Mamunye) மற்றும் அல் முஹமேட்டியே (14ம் நூற்றாண்டு, al-Muhammediye) போன்ற பெயர்களைக் கொண்ட நோரியாசுகளே மிகவும் பெரியவை ஆகும். பொதுவாக இது நீரை நகரத்திற்கும் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவே பயன்பட்டன.

மற்றைய இடங்கள்:

  • அசெம் மாளிகை
  • நூர் அல்-டின் பள்ளிவாசல்
  • சிறிய மம்லுக் அல்-இச்சி பள்ளிவாசல் (15ம் நூற்றாண்டு)
  • அபு அல்-பிடா பள்ளிவாசல்
  • அல்-கசனைன் பள்ளிவாசல்
  • காமாவின் கிரேட் பள்ளிவாசல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads