சனவரி
கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் மாதம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சனவரி (January, ஜனவரி அல்லது யனவரி) கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது. சராசரியாக, வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதியில் (குளிர்காலத்தின் இரண்டாவது மாதம்) ஆண்டின் மிகவும் குளிரான மாதமாகவும், தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதியில் (கோடையின் இரண்டாவது மாதம்) ஆண்டின் மிகவும் வெப்பமான மாதமாகவும் இது உள்ளது. தெற்கு அரைக்கோளத்தில், சனவரி மாதம் வடக்கு அரைக்கோளத்தில் சூலை மாதத்திற்குச் சமமான பருவகாலமாகும்.
<< | சனவரி | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXV |
Remove ads
வரலாறு
உரோமானியப் புராணங்களில் தொடக்கங்களினதும் மாற்றங்களினதும் கடவுளான சானசு என்பவரின் பெயரால் சனவரி (இலத்தீன் மொழியில், இயனுவாரியசு) எனப் பெயரிடப்பட்டது.[1]
நிகழ்வுகள்
சிறப்பு நாட்கள்
- சனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
- சனவரி 7 - கிறித்துமசு (மரபுவழி)
- சனவரி 12 - சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்
- சனவரி 26 - ஆத்திரேலியா நாள், இந்தியக் குடியரசு நாள்
- சனவரி 30 - மகாத்துமா காந்தி நினைவு நாள்
- சனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
- தைப்பொங்கல்
- தமிழ்ப் புத்தாண்டு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads