காமேசுவர் சிங்
தர்பங்காவின் மகாராஜா From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாராஜா சர் காமேஷ்வர் சிங் கௌதம் (Sir Kameshwar Singh Goutam) (1907 நவம்பர் 28 - 1962 அக்டோபர் 1) இவர் தர்பங்காவின் மகாராஜா ஆவார். 1929 - 1952 வரை மிதிலை பிரதேசத்தில் சில பகுதிகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து இவரது பதவி இரத்து செய்யப்பட்டன.
Remove ads
விளையாட்டுகளுக்கு ஆதரவு
இவர் 1935 ஆம் ஆண்டில் தர்பங்காவில் நிறுவப்பட்ட அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் புரவலராக இருந்தார். இவர் கொல்கத்தாவில் தர்பங்கா கோப்பை போட்டியைத் தொடங்கினார். இதில் இலாகூர், பெசாவர், சென்னை, தில்லி, ஜெய்ப்பூர், மும்பை, ஆப்கானித்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்றன. இலகாரியசராய் போலோ மைதானம் உட்பட 4 உட்புற மற்றும் வெளிப்புற அரங்கங்களை இவர் கட்டினார். பராமரிப்பு இல்லாததால் இந்த அரங்கங்கள் எதுவும் இப்போது இல்லை.
Remove ads
சுயசரிதை
இவர் தர்பங்கா ராஜாவின் மன்னர் மகாராஜா சர் ராமேசுவர் சிங் கௌதமின் மகனவார். இவர் 1907 நவம்பர் 28 ஆம் தேதி தர்பங்காவில் மைதில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1929 சூலை 3, அன்று தனது தந்தை இறந்தவுடன், தர்பங்கா சிம்மாசனத்தில் அமர்ந்தார். [1]
1930–31ல் நடைபெற்ற முதலாம் வட்டமேசை மாநாடு மற்றும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்காக இலண்டனுக்கு சென்ற அணியில் உறுப்பினராக இருந்தார். [2] [3]
இவர் 1933-1946 ஆண்டுகளில் மாநில அமைப்பின் உறுப்பினராக இருந்தார், 1947-1952 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் இருந்தார். [4] 1878 இல் விக்டோரியா மகாராணியால் நிறுவப்பட்ட வீரவணக்கத்தின் ஒரு வரிசையான் இந்திய சாம்ராஜ்யத்தின் மிகச்சிறந்த ஆணை என்ற நிலையிலிருந்து உயர்த்தப்பட்டு, 1933 சனவரி 1, அன்று இந்தியப் பேரரசின் மிக உயர்ந்த ஒழுங்கின் நைட் கமாண்டராக நியமிக்கப்பட்டார். [5]
1934 ஆம் ஆண்டு நேபாள-பீகார் பூகம்பத்தின் நினைவாக, ராஜ் குயிலா என்ற கோட்டையை நிர்மாணிக்கத் தொடங்கினார். பிரிட்டிசு அரசு மகாராஜா காமேசுவர் சிங்குக்கு "பூர்வீக இளவரசர்" என்ற பட்டத்தை வழங்கியது. கோட்டை கட்டுமான ஒப்பந்தம் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் 1939-40ல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. வழக்கு மற்றும் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக வேலை நிறுத்தப்படும் வரை கோட்டையின் மூன்று பக்கங்களும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் கட்டப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய அரசாங்கத்தால் பூர்வீக உரிமைகளை ரத்து செய்ததன் மூலம், கோட்டையின் பணிகள் இறுதியில் கைவிடப்பட்டன. [6]
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளராக 1952–1958 நாடாளுமன்ற உறுப்பினராக (மாநிலங்களவை) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 இல் இறக்கும் வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார்
1929-1962 வரை மைதில் மகாசபாவின் தலைவராகவும் [7] [8] சிறீபாரத் தர்ம மகாமண்டலியின் தலைவராகவும் இருந்தார். [9] [10]
பீகார் நில உரிமையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்த இவர், அகில இந்திய நில உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வங்காள நில உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். மேலும், இவர் சுதந்திரத்திற்கு முந்தைய பீகார் ஐக்கிய கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] [10] பீகாரில் விவசாய வேதனையின் முக்கியமான ஆண்டுகளில் அதன் கொள்கையை வழிநடத்தியது. [11]
Remove ads
தொண்டு நடவடிக்கை
வின்ஸ்டன் சர்ச்சிலின் உறவினரான பிரபல கலைஞர் கிளேர் ஷெரிடன் தயாரித்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பெற்ற முதல் நபர் இவர்தான். இந்த மார்பளவு சிலை இந்தியத் தலைமை ஆளுநர் லார்ட் லின்லித்கோவுக்கு வழங்கப்பட்டது. இதை மகாத்மா காந்தி 1940 இல் லின்லித்கோ பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் ஒப்புக் கொண்டார். [12]
இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். இவரின் தந்தை சர் இராமேசுவர் சிங் ஒரு பெரிய கொடையாளியாக இருந்தார். [13] 1939 ஆம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா தானாக முன்வந்து பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஏகமனதாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார். [12]
1930 ஆம் ஆண்டில், சர் காமேசுவர் சிங், வடமொழியின் ஊக்கத்திற்காக பாட்னா பல்கலைக்கழகத்திற்கு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். [14]
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1951 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத் அவர்களின் முயற்சியின் பேரில் கப்ரகாட்டில் நிறுவப்பட்ட மிதிலா முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தர்பங்காவில் உள்ள பாகமதி ஆற்றின் அருகே அமைந்துள்ள 60 ஏக்கர் (240,000 மீ 2) நிலத்தையும், மா மற்றும் லிச்சி மரங்களின் தோட்டத்தையும் சிங் நன்கொடையாக வழங்கினார். [15] மேலும் இவர் 1960 மார்ச் 30, அன்று சமசுகிருத பல்கலைக்கழகத்தைத் தொடங்க தனது ஆனந்த் பாக் அரண்மனையை பரிசளித்தார். இப்போது அதற்கு காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது [16]
தொழிலதிபர்
1908 ஆம் ஆண்டில் வங்காள தேசிய வங்கியின் இணை நிறுவனராக இருந்த இவரது தந்தையால் தொடங்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தொழில்களில் முதலீடுகளை மகாராஜா காமேசுவர் சிங் பெற்றார்.
தனது தந்தையின் சில மரபுகளை மரபுரிமையாகக் கொண்ட காமேசுவர் சிங், பல்வேறு தொழில்களில் தனது பங்கை மேலும் விரிவுபடுத்தினார். சர்க்கரை, சணல், பருத்தி, நிலக்கரி, இரயில்வே, இரும்பு மற்றும் எஃகு, விமான போக்குவரத்து, அச்சு ஊடகம், மின்சாரம் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் 14 வணிகங்களை இவர் கட்டுப்படுத்தினார்.
Remove ads
நினைவுச் சின்னங்கள்
- மகாராஜா காமேசுவர் சிங் மருத்துவமனை, தர்பங்கா
- மகாராஜா சர் காமேசுவர் சிங் நூலகம், தர்பங்கா
- காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம், தர்பங்கா
- சர் காமேசுவர் சிங்கின் மூன்றாவது மனைவியான மகாராணி திராணி காம சுந்தரி, மகாராஜாதிராஜா காமேசுவர் சிங் கல்யாணி என்ற அறக்கட்டளையை 1989 ஆம் ஆண்டில் இவரது நினைவாக அறக்கட்டளை நோக்கத்திற்காக நிறுவினார். [17]
குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads