காயாமொழி
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயாமொழி (Kayamozhi) கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு மேற்கே 9 கி.மீ.[1][2] தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
சொற்பிறப்பியல்
காயாமொழி = காயாத + மொழி, வற்றாத மொழி வளம் & இயற்கை வளங்களை கொண்ட கிராமம் என்று பொருள்படும்.
வரலாறு
தமிழ்நாடு மாகாணத்தின் வடப்பட்டு பகுதியின் தலைநகரமாக காயாமொழி விளங்கியதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.[3]
குடிமையியல்
மக்கள்தொகை
காயாமொழியின் மொத்த மக்கள் தொகை 5497.இதில் ஆண்கள் 2,552 மற்றும் பெண்கள் 2,945. எழுத்தறிவு 85%
குக்கிராமங்கள்
காயாமொழி கிராமப் பஞ்சாயத்தின் கீழ் வரும் தெருக்கள் பின்வருமாறு:
- ஆறுமுகபுரம்
- ஆதித்தனார் காலனி
- அம்மாள்புரம்
- கந்தசாமிபுரம்
- காயாமொழி
- குமாரசாமிபுரம்
- மத்திமான்விளை
- மேலரசூர்
- பள்ளத்தூர்
- ராமலிங்கபுரம்
- ராமநாதபுரம்
- சுப்பிரமணியபுரம்
- தேரிகுடியிருப்பு
- ஊத்தாங்கரைவிளை
- வள்ளுவர் நகர்
புவியியல்
- பிறப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து சாலை வழியாக 9 கி.மீ. தொலைவில் காயாமொழி உள்ளது. மறுபுறம், காயாமொழி உடன்குடியிலிருந்து சாலை வழியாக 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களுடன் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைப்புகள்: 8°30′32″N 78°2′43″E.
- கடல் மட்டத்திலிருந்து உயரம் : 19 மீ (69 அடி)
- எல்லைகள்:
- நிலவகைப்பாடு:
காயாமொழியில் வயல்வெளிகள் மற்றும் வறண்ட நிலப் பகுதிகள் இருப்பதால், முறையே மருதம் (விவசாய நிலம்) மற்றும் பாலை (வறண்ட நிலம்) திணைகளின் கீழ் வகைப்படுத்தலாம்.
- புவியியல் பண்புக்கூறுகள்:
Remove ads
பொருளாதாரம் & வேலைவாய்ப்பு
காயாமொழியின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மக்கள் "தினத்தந்தி" [5] நாளிதழிலும் வேலை செய்கிறார்கள்.
ஐந்துக்கும் மேற்பட்ட "சுயஉதவி குழுக்கள்" பெரும்பாலும் நடுத்தர வர்க்க பெண்களின் தேவைகளை தீர்க்க உள்ளன.
அரசு வேலைவாய்ப்பு திட்டங்கள் :
"தூய்மையான பாரத இந்தியா[6]" மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு[7] திட்டம் போன்ற அரசாங்கத் திட்டங்களும் உள்ளன.
தொழிற்சாலைகள் :
"பனை வெல்லம் தயாரிப்பு[8] & தேங்காய் நார் கயிறு திரிக்கும்[9] தொழிற்சாலைகள் இந்த கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக செயல்பட்டு வருகிறது.
Remove ads
குறிப்பிடத்தக்க இடங்கள்
காயாமொழியில் உள்ள பொழுதுபோக்கிற்கான இடங்கள் :
காயாமொழியின் பசுமை நுழைவாயில் (கிழக்கு பகுதி).
காயாமொழி குளம்[10], காயாமொழிக்கு தென்கிழக்கு.
காயாமொழி கால்வாய், காயாமொழிக்கு தென்கிழக்கு.
சிவப்பு மணல் குன்றுகள்[11], காயாமொழிக்கு மேற்கு மற்றும் தேரிகுடியிருப்பு.
தளவாய்புரம் கால்வாய் மற்றும் பாலம், காயாமொழிக்கு கிழக்கு
ஊத்தங்கரைவிளை கால்வாய் மற்றும் பாலம், காயாமொழிக்கு வடகிழக்கு.
காயாமொழி மெயின் பஜார்
காயாமொழி மெயின் பஜார் எனப்படுவது கிராமத்தின் நான்கு வழிச் சாலைகளின் சந்திப்பு ஆகும். கிழக்கே திருச்செந்தூர், மேற்கே தேரிக்குடியிருப்பு, தெற்கே உடன்குடி, வடக்கே நாசரேத் & குரும்பூரையும் இந்த சாலைகள் இணைக்கிறது.
இது காயாமொழியின் பிரதான மற்றும் முக்கிய இடமாகும். முக்கிய மளிகைக் கடைகள், உணவகங்கள், அலைபேசி சார்ந்த கடை, தபால் அலுவலகம், மருந்தகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றைக் கொண்ட இடமாக விளங்குகிறது.
மறுபுறம், இந்த இடம் பேருந்து நிறுத்தமாகவும் மற்றும் மூன்று சக்கர வாகன (ஆட்டோ)நிறுத்தமாகவும் செயல்படுகிறது.
Remove ads
வசதிகள் & பயன்பாடுகள்
கல்வி
பள்ளிகள் :
1) சி பா ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி, காயாமொழி[12][13].
2) கோவிந்தம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயாமொழி[14].
3) கல்வி சபா சரசுவதி துவக்கப்பள்ளி, காயாமொழி[15].
4) வி கே ஆர் எஸ் துவக்கப்பள்ளி, காயாமொழி.[16]
5) ஜாரியா துவக்கப்பள்ளி,[17] காயாமொழி.
6) கலைவாணி துவக்கப்பள்ளி, சுப்பிரமணியபுரம், காயாமொழி[18].
மழலையர் அங்கன்வாடி :
1) குமாரசாமிபுரம் அங்கன்வாடி 2) ராமநாதபுரம் அங்கன்வாடி 3)முஸ்லீம் தெரு அங்கன்வாடி ஆகிய மூன்று அங்கன்வாடிகள் அமைந்துள்ளது.
கல்லூரிகள் :
காயாமொழிக்கு அருகே திருச்செந்தூரில் ஆதித்தனார் அறக்கட்டளையின்[19] கீழ் இயங்கும் ஆதித்தனார் அரசு ஆடவர் கலை அறிவியல் கல்லூரி, கோவிந்தம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆதித்தனார் உடற்பயிற்சி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மருத்துவம் & நலவாழ்வு
1) அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காயாமொழி[20][21].
- காயாமொழி மற்றும் அதன் சுற்று வட்டார குக்கிராமம மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்கிறது.
- இங்கே சித்த மருத்துவ பிரிவு, இரத்த பரிசோதனை நிலையம், தொழுநோய் & காசநோய் பிரிவுகள், கண் & காது பரிசோதிக்கும் இடம், சிறு மூலிகைத்தோட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காய்ச்சல் பகுதியையும் கொண்டுள்ளது.
2) அரசு கால்நடை மருத்துவமனையும் [22] காயாமொழியில் அமைந்துள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் & நீர் வள வசதிகள்
காயாமொழி குமாரசாமிபுரம் & முஸ்லிம் தெருவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. தூய்மையான குடிநீர் சிறந்த முறையில் சுத்திகரிக்கப்பட்டு குறைந்த செலவில் வழங்கப்படுகிறது.
அரசு நியாயவிலைக் கடைகள்
1) குமாரசாமிபுரம் நியாய விலை கடை
2) வள்ளுவர் நகர்[23] நியாய விலைக்கடை ஆகிய இரண்டும் காயாமொழியின் அரசு நியாய விலை கடைகள் ஆகும்.
விளையாட்டு & திடல்
காயாமொழி சிவப்பு மணல் குன்றுகளின் சிறு பகுதியானது விளையாட்டு திடலாக செயல்படுகிறது. மட்டைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் விளையாடப்படுகிறது. மேலும் அதற்கான வசதிகளும் அமையப்பெற்றுள்ளது.
வங்கி & வணிகம்
1) தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி[24], காயாமொழி.
2) வேளாண் கூட்டுறவு வங்கி[23], காயாமொழி.
3) காயாமொழி அலுவல் நிலையம்[25].
4) சுப்பிரமணியபுரம் அலுவல் நிலையம்[26].
ஆகிய வணிகம் சார்ந்த நிறுவனங்கள் காயாமொழியில் அமைந்துள்ளன.
இதுதவிர இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரமன்குறிச்சியிலும் எஸ் பி ஐ வங்கி, இந்தியன், கனரா & ஐசிஐசிஐ வங்கிகள் திருச்செந்தூரிலும் அமைந்துள்ளது.
இ சேவை மையம்
1) காயாமொழி வேளாண் கூட்டுறவு வங்கி
2) காயாமொழி இ சேவை மையம்[27]
ஆகியவை காயாமொழி ஊராட்சியின் இ சேவை மையங்களாக செயல்படுகிறது.
மின்உற்பத்தி அலுவலகம்
காயாமொழி மின்உற்பத்தி அலுவலகம்[28] சுற்றுவட்டார குக்கிராமங்களின் மின்உற்பத்தி & அதன் கட்டணம் பெறும் தலைமை இடமாகும்.
நூலகம்
காயாமொழியில் இரண்டு நூலகங்கள் உள்ளன. ஒன்று சி பா ஆதித்தனார் பள்ளி அருகிலும் மற்றொன்று டி எம் பி வங்கி(காயாமொழி பஜார்) [29] அருகிலும் அமைந்துள்ளது.
மாணாக்கர் விடுதி
1) அரசு மாணவர் விடுதி[30] 2) அரசு மாணவியர் விடுதி[31] ஆகிய இரண்டு விடுதிகள் பள்ளி மாணாக்கர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள்
1) பா. இராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபம், காயாமொழி[32]. 2) சுப்பையா விலாஸ் திருமண மண்டபம், சுப்பிரமணியபுரம். 3) ஆர் டி மணி நாடார் திருமண மண்டபம், கந்தசாமிபுரம்[33]. ஆகிய திருமண மண்டபங்கள் காயாமொழியினில் அமைந்துள்ளன.
பிற வசதிகள்
பொது கழிப்பறை
காயாமொழி குமாரசாமிபுரத்தில் பொதுக் கழிப்பறை வசதியும் உள்ளது. பராமரிப்பு இல்லாததால், தற்போது, ''''செயல்படுத்தும் நிலையில் இல்லை''.
கல்லறை தோட்டம்
அறிக்கைகளின்படி, இந்த கிராமத்தில் மயானங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒவ்வொரு தெருக்களும் குறைந்தபட்சம் ஒரு இடுகாட்டினை கொண்டு உள்ளது. தண்ணீர் தொட்டி, அடி பம்ப் செட் அப்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கான காத்திருப்பு கூடங்கள் போன்ற வசதிகள் கொண்டுள்ளது.
அரசு மதுபானக்கடை காயாமொழியிலும் டாஸ்மாக் வசதி உள்ளது. இது பைபாஸ் ரோடு (திருச்செந்தூர் - நாகர்கோயில்) காயாமொழி வழியாக செல்லும் சாலையின் மூலையில் அமைந்துள்ளது.
Remove ads
போக்குவரத்து, சுற்றுலா தலங்கள்
போக்குவரத்து
உள்ளூர் போக்குவரத்து வசதிகள்
- ஆட்டோ, மினி வேன் நிறுத்தம்🛺🚞 - காயாமொழி மெயின் பஜார்.
- பேருந்து நிறுத்தம்🚃
சுற்றுலா தலங்கள்
- நீர்நிலைகளின் (கடல்,குளம்) இருப்பை குறிக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads