காரகோரம் நெடுஞ்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram Highway (Urdu: شاہراہ قراقرم, romanized: śahirāh qarāquram; துவக்கத்தில் இதனை KKH என்றும், பின்னர N-35 அல்லது தேசிய நெடுஞ்சாலை 35 என்றும் சீன-பாகிஸ்தான் நட்புறவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்பட்டது). பட்டுப் பாதையில் அமைந்த காரகோரம் நெடுஞ்சாலை 1,300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஹசன் அப்தால் எனுமிடத்திலிருந்து துவங்கி, லாகூர், இராவல்பிண்டி, இஸ்லாமாபாத் வழியாக கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெசாவர் நகரத்தின் வழியாக, காஷ்மீரத்தின் வடக்கில் உள்ள ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியிலிருந்து, சீனாவின் தூரமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாநிலத்தின் கஷ்கர் நகரத்தை இணைக்கிறது.
இது 4714 மீட்டர் உயரமுள்ள காரகோரம் மலைத்தொடரின் குஞ்செராப் கணவாய் வழியாகச் செல்லும் உலகின் உயரமான சாலை ஆகும்.[1][2]ஆசிய நெடுஞ்சாலை 4இன் ஒரு பகுதியாக காரகோரம் நெடுஞ்சாலை உள்ளது.
Remove ads
வரலாறு


அனைத்து தட்ப வெப்ப நிலைகளை தாங்கும் வகையில், காரகோரம் நெடுஞ்சாலைப் பணி 1959-இல் துவங்கி, 1979-இல் முடிவுற்றது. ஆனால் பொதுப் போக்குவரத்திற்கு 1986ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது. பாகிஸ்தான் பகுதியில் செல்லும் இந்நெடுஞ்சாலையை பாகிஸ்தான் நாட்டின் இராணுவ எல்லைச்சாலை அமைப்பினர் நிறுவினர்.[3]சீனப் பகுதியில் இந்நெடுஞ்சாலையை சீன இராணுவத்தினர் நிறுவினர்.

Remove ads
நெடுஞ்சாலைப் பயணம்
பாகிஸ்தானின் இராவல்பிண்டி மற்றும் லாகூர் நகரங்களிலிருந்து கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கித்-பல்டிஸதான் பிரதேசத்தின் நகரங்களுக்கு பேருந்துச் சேவைகள் நடைபெறுகிறது.
கஷ்கர் முதல் கில்கித் வரை பேருந்துச் சேவை
1 சூன் 2006 முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கித் முதல் சீனாவின் சிஞ்சியாங் மாநிலத் தலைநகரம் கஷ்கர் வரை, பொது மக்கள் பயணத்திற்கு பேருந்துச் சேவை நடத்தப்படுகிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads