கார்த்திக் ஆர்யன்

From Wikipedia, the free encyclopedia

கார்த்திக் ஆர்யன்
Remove ads

கார்த்திக் திவாரி (Kartik Aaryan பிறப்பு 22 நவம்பர் 1990), கார்த்திக் ஆர்யன் என்று பரவலாக அறியப்படும் இவர் பெரும்பான்மையாக இந்தி படங்களில் தோன்றும் ஓர் இந்திய நடிகர் ஆவார். குவாலியரில் பிறந்து வளர்ந்த இவர், உயிரி தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பெறுவதற்காக நவி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புத் தேடினார்.ஆர்யன் 2011 ஆம் ஆண்டில் பியார் கா புஞ்சனாமா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இது மூன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் காதல் இன்னல்களைப் பற்றிய ஒரு திரைப்படமாகும்.

Thumb
கார்த்திக் ஆர்யன்

ஆகாஷ் வாணி (2013) மற்றும் காஞ்சி: தி அன்பிரேக்கபிள் (2014) ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஆர்யன் நடித்தார். ஆனால் இவை வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. பின்னர் அவர் ரஞ்சன் மற்றும் பருச்சாவுடன் இணைந்து பியார் கா புஞ்சனாமா 2 (2015) மற்றும் சோனு கே திட்டு கி ஸ்வீட்டி (2018) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவை இரண்டும் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படமாக அமைந்தது. ஆனால் விமர்சன ரீதியாக அவை தோல்வியடைந்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டில் லுகா சுப்பி எனும் திரைப்படத்தில் நடித்தார்.

நடிப்பு வாழ்க்கையினைத் தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இரு விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

Remove ads

வாழ்க்கை மற்றும் தொழில்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் ஆரம்பம் (1990–2014)

கார்த்திக் திவாரி (பின்னர் ஆரியன்) நவம்பர் 22, 1990 அன்று மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்தார்.[1] அவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் ஆவர்.அவரது தந்தை ஒரு குழந்தை மருத்துவர், மற்றும் அவரது தாயார் மாலா ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் . நவி மும்பையின் டி.ஒய் பாட்டீல் பொறியியல் கல்லூரியில் உயிரியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார் [2] நேர்காணலில் கலந்து கொள்வதற்காக தனது வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு இரண்டு மணி நேரம் பயணம் செய்வேன் என்று தனது நேர்காணலில் கூறியுள்ளார். ஆர்யன்பல்கலைக்கழகத்தில் இருந்தபோது விளம்பரத்தில் நடிக்கத் துவங்கினார்.

தனது மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது, ஆர்யன் திரைப்படத்தில்அறிமுகமானார். லவ் ரஞ்சனின் பட்டி பிலிம் பியார் கா புஞ்சனாமா (2011) திரைப்படத்தில் திவேண்டு சர்மா, ராயோ எஸ் பகிர்தா, மற்றும் நுஷ்ரத் பருச்சா ஆகியோருடன் இணைந்து நடித்தார்.

Remove ads

மற்ற வேலை

படங்களில் நடிப்பதனைத் தவிர்த்து, பிராண்ட் ஹம்மல் இன்டர்நேஷனல் எனும் விளையாட்டு ஆடை நிறுவனம், கிரீம் எமாமி ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் மற்றும் மன்யாவர் ஆடை நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பு விளம்பரங்களில் நடித்து வருகிறார் .[3][4][5] ஆயுஷ்மான் குர்ரானாவுடன் 2018 ஐஃபா விருதுகளையும், விக்கி கௌசலுடன் 2019 ஜீ சினி விருதுகளையும் அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[6][7]

திரைப்படங்கள்

ஆர்யன் 2011 ஆம் ஆண்டில் பியார் கா புஞ்சனாமா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், இது மூன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் காதல் இன்னல்களைப் பற்றிய ஒரு திரைப்படமாகும். ஆகாஷ் வாணி (2013) மற்றும் காஞ்சி: தி அன்பிரேக்கபிள் (2014) ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஆர்யன் நடித்தார்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads