கார்த்தி சிதம்பரம்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்தி சிதம்பரம் (பிறப்பு: 16 நவம்பர் 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் மற்றும் 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பல்வேறு நிறுவனங்களில் இயக்குனரான கார்த்தி விளையாட்டுகளிலும் ஆர்வம் உடையவர்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கார்த்தி சிதம்பரம் குறித்து கவன ஈர்ப்பு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Remove ads
இளமை
இவர் நவம்பர் 16, 1971 ஆம் ஆண்டு இந்திய அரசின் முன்னாள் நிதித் துறை அமைச்சர் ப. சிதம்பரம் - நளினி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் சென்னையின் தொன் போஸ்கோ பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பையும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்தார். கார்த்தி சிதம்பரத்தின் மனைவி மருத்துவர் ஸ்ரீநிதி ரங்கராஜன் ஆவார். இவர்களுக்கு அதிதி என்ற குழந்தை உள்ளது. இந்தியாவில் பல டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் கார்த்தி சிதம்பரம், அகில இந்திய டென்னிஸ் சங்கத்திலும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திலும் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர்.
Remove ads
தொழில் & வணிகம்
இந்திய தொழில்துறையில் ஆர்வமிக்க கார்த்தி சிதம்பரம், அ. சி. முத்தையாவின் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். தற்போது தனியாக தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இதே சிவகங்கை தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான செந்தில்நாதனிடம் தோல்வியடைந்தார்.
போட்டியிட்ட தேர்தல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads