கார்வெண் மீன்கொத்தி
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொரி மீன்கொத்தி அல்லது வெள்ளை மீன்கொத்தி அல்லது கரும்புள்ளி மீன்கொத்தி (Pied Kingfisher, Ceryle rudis) ஒரு நீர் மீன்கொத்தி. இதன் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறச்சிறகுகளைக் கொண்டிருப்பதால் கருப்பு வெள்ளை மீன்கொத்தி என்றழைக்கப்படுகிறது. இது நீர்நிலைகளில் மீன்களைப் பாய்ந்து பிடிக்கும் முன்பு பறந்து கொண்டிருக்கும். இப்பறவை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவையே மீன்கொத்திகளில் பொதுவாகக் காணப்படும் மூன்றாவது மீன்கொத்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவை மீன்களையே முதன்மை உணவாகக் கொண்டாலும், பெரிய நீர்வாழ் பூச்சிகளையும் உண்ணும். இதன் இனப்பெருக்கக் காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையாகும்.
Remove ads
வகைபிரித்தல்
இதில் ஐந்து துணை இனங்கள் உள்ளன:[2]
- C. r. syriacus Roselaar, 1995 – துருக்கி, இஸ்ரேலின் கிழக்கு முதல் தென்மேற்கு ஈரான் வரை (சில பறவையியலாளர்கள் இந்த கிளையினத்தை அங்கீகரிக்கவில்லை)[3][4]
- C. r. rudis (Linnaeus, 1758) – எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவில் சகாராவுக்கு தெற்கே
- இந்திய வெள்ளை மீன்கொத்தி C. r. leucomelanurus Reichenbach, 1851 – கிழக்கு ஆப்கானித்தான் இந்தியா வழியாக தெற்கு சீனா மற்றும் வடக்கு இந்தோசீனா வரை
- கேரள வெள்ளை மீன்கொத்தி C. r. travancoreensis Whistler, 1935 – தென்மேற்கு இந்தியா[5]
- C. r. insignis Hartert, 1910 – கிழக்கு மற்றும் தென்கிழக்கு சீனா, ஆய்னான் தீவுகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads