காலமெல்லாம் காதல் வாழ்க

ஆர். பாலு இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

காலமெல்லாம் காதல் வாழ்க
Remove ads

காலமெல்லாம் காதல் வாழ்க (Kaalamellam kathal vazha) 1997-இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பிலும், ஆர். பாலு இயக்கத்திலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்தக் காதல் திரைப்படத்தில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி, விவேக் ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். இப்படம் 275 நாள்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இது கன்னடத்தில் இரமேஷ் அரவிந்த்.ஸ்ரீ லட்சுமி ஆகியோர் நடிப்பில் "குசலவே சேமவே " என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும்.

விரைவான உண்மைகள் காலமெல்லாம் காதல் வாழ்க, இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

ஜீவா (முரளி) வீட்டின் தேவை அதிகமாக உள்ள நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் பாடகனாகவும் உள்ளான். அவனது இசைத் திறமையைக் கண்டு கெளசல்யா என்ற பணக்கார பெண் அவன் மேல் (கெளசல்யா) மந்திரத்தால் மயங்கியவள் போல நடந்து கொள்கிறாள். அவனது திறமையை பாராட்டி அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு தொலைபேசியில் அவனை அழைத்து பாராட்டுகிறாள். தொலைபேசியில் பேசிய கௌசல்யாவின் குரல் அவனுக்குள் வியக்கத்தக்க வகையில் மிகத் தீவிரக் காதலாக மாறுகிறது. காதல் கொண்ட அவன் பைத்தியமாக அலைகிறான். அவளை நேரில் காண விரும்புகிறான்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

தயாரிப்பு

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தனது முந்தைய படமான காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் தலைப்பைக் கொண்டு இப்படத்திற்குப் பெயர் சூட்டினார். நடிகை கெளசல்யாவிற்கு இது அறிமுகப்படமானது.

வெளியீடு

"இது போன்ற நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்த்தே வெகுநாளாகிறது என்றும், சராசரிக்கும் மேலான நல்ல இசையையும், வெகு துல்லியமான ஒளிப்பதிவையும் இதில் நாம் காணலாம்" என இந்தோலிங்க்.காம் என்ற வலைத்தளம் விமர்சனம் செய்தது."[1] "காதல் கோட்டை" (1996) அதையடுத்து "காலமெல்லாம் காதல் வாழ்க" ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றிக்குப் பின்னர் சிவசக்தி பாண்டியன்" காதலே நிம்மதி" என்ற ஒரு காதல் படத்தையே தான் மீண்டும் எடுக்கப் போவதாக கூறினார்([2]

Remove ads

ஒலிப்பதிவு

விரைவான உண்மைகள் காலமெல்லாம் காதல் வாழ்க, ஒலித்தடம் தேவா ...

இசையமைப்பாளர் தேவாவின் இசை, இரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்களை தேவா, பழநிபாரதி, பொன்னியின் செல்வன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேலதிகத் தகவல்கள் தடம்- பட்டியல், # ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads