கிருஷ்ணராஜ்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிருஷ்ணராஜ் (Krishnaraj; பிறப்பு 25 திசம்பர் 1951), தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் முன்னாள் உதவி இசையமைப்பாளர் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் கலைமாமணி கிருஷ்ணராஜ், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேம்படிதாளம் எனும் ஊரில் 25 திசம்பர் 1951 அன்று நெசவுத்தொழில் பின்னணி கொண்ட வரதம்மாள் - அ. இராமசாமி இணையருக்குப் பிறந்தார் கிருஷ்ணராஜ்.[1] இவர் பெற்றோர் இசையறிவு பெற்றிருந்தனர். இவரின் ஐந்து அண்ணன்களில் இருவர் கலை ஈடுபாடு கொண்டவர்கள்.[2][3] வேம்படிதாளத்திலேயே இடைநிலைப் பள்ளி இறுதி (1971) பயின்றார். அதன்பின் 10 ஆண்டுகள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டார். இக் காலகட்டத்தில் "கேள்வி ஞான" அடிப்படையில் பாடல்கள் பாடவும் இசைக்கருவிகள் வாசிக்கவும் பழகினார்.[2] சேலம் சௌந்தர் நாடகக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[3]

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்த இவருக்கு. நாதஸ்வர வித்துவான் நடேசன், பி. ராஐம் , கே. வி. நாராயணசுவாமி, ஆர். வேதவல்லி, பி. கிருஷ்ணமூர்த்தி, வி. ஆர். கிருஷ்ணன், பிரேமா ஆகியோர் ஆசிரியர்களாக விளங்கினர்.1984-இல் இசைக் கல்லூரி வழங்கிய சங்கீத வித்வான் மற்றும் சிறந்த மாணவர் விருதுகளை அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரனிடம் பெற்றார்.[3][4] அதே ஆண்டில் இசையமைப்பாளர் ஆர். ராமானுஜனின் உதவியாளராக ஆரா (Arah) எனும் திரைப்படத்துக்காகப் பணியாற்றினார். எனினும் அப் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. வேறு சில இசையமைப்பாளர்களுக்காக இந்து மற்றும் கிறித்தவ இறை நிகழ்வுகளில் பாடல்களைப் பாடினார். திரை வாய்ப்புகளையும் தேடத் தொடங்கினார்.

காதல் கோட்டை (1996) திரைப்படத்தில் இடம்பெற்ற வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடலின் வழியே கவனம் பெற்றார். பொற்காலம் (1997) திரைப்படத்தின் தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து பாடலுக்கு, சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றார்.[5][6] இப் பாடலுக்காக, முன்னாள் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் செல்லப்பன் இராமநாதனின் (1924-2016) நேரடிப் பாராட்டையும் பெற்றார். 2016-இல் இராமநாதன் மறைந்தபின் அவரின் இறுதி ஊர்வலத்தில் இப்பாடல் இசைக்கப்பட்டது.

Remove ads

பாடல் பட்டியல் (பகுதியளவு)

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

விருதுகள்

தம்ஸ் அப் விருது, ருச்சி விருது, ரோஜா விருது மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் அமைப்பான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads