காலாந்தகக் கண்டர் (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்னப் பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல் காக்கும் தளபதியாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் கதாபாத்திரமாகும். பழுவூர் எனும் ஊரினை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர்களின் வரலாற்றினை மையமாக கொண்டு இந்த கதாபாத்தினை உருவாக்கியுள்ளார். சோழப்பேரரசின் கீழ் பழுவூர் சிற்றரசர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
கதாப்பாத்திரத்தின் இயல்பு
காலாந்தகக் கண்டர் என்பது இவருடைய இயற்பெயராகும். இவருடைய அண்ணனை கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் என்று மக்களால் அழைக்கப் பெறுகிறார். காலாந்தகக் கண்டரின் கீழ் தஞ்சை அரண்மனை பொக்கிசமும், தானிய அறையும் இருந்தது. மேலும் பாதாளச் சிறையொன்றினையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் நிர்வகித்து வந்தார்.
இளம் வீரர்களைக் கண்டால், அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தன்னுடைய படையில் இணைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழர் உடல்நலமின்றி இருக்கும் போது, பலத்த காவல் புரிந்து கோட்டையைப் பாதுகாத்து வந்தார்.
தன்னுடைய தமயனார் பெரிய பழுவேட்டரையர் நந்தினி தேவி எனும் மோகினியிடம் சிக்கி வதைபடுவதைக் கண்டு வருந்தினார். ஆதித்த கரிகாலனிடமிருந்து குந்தவைக்கு ஓலை கொண்டுவந்த வல்லவரையனை ஒற்றன் என சந்தேகம் செய்து அவனைப் பிடித்துவர காவலாட்களை அனுப்பினார். வல்லவரையனிடம் இருந்த பனை இலச்சினையுடன் கூடிய கணையாழியை நந்தினிதான் தந்திருக்க வேண்டும் என்பதைக் கணித்தார். அதை பெரிய பழுவேட்டரையரிடம் கூறி அவரின் கோபத்திற்கு ஆளானார்.
தஞ்சை கோட்டையினை ஈழத்து போரில் படைக்குத் தலைமை வகித்த கொடும்பாளூர் பெரிய வேளார் கைப்பற்றி விடுகிறார். கொடும்பாளூர் வேளாருக்கும் பழுவேட்டரையர்களுக்கும் நெடுகாலமாக பகை இருந்து வருகிறது. எனவே தஞ்சை கோட்டை தன்வசமாகும் வரை அக்கோட்டைக்குள் பிரவேசிக்க இயலாதென மறுத்துவிடுகிறார். அதனை அறிந்த சுந்தர சோழர் மீண்டும் காலாந்தக கண்டருக்கு கோட்டை பொறுப்பினை அளிக்கின்றார். தன்னுடைய மருமகன் சோழ குலத்தவன் அல்ல, பாண்டிய மைந்தன் என்பதை அறிந்து தன்னுடைய மகளை மீட்டுக் கொண்டுவர புறப்படுகிறார். மதுராந்தகனுக்கும், காலந்தக கண்டருக்கும் இடையே நடக்கும் சண்டையில் காலாந்தகக் கண்டர் இறந்துவிடுகிறார்.
பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவர், பெரிய பழுவேட்டரையர் சோழ மன்னரின் ஆட்சிக்கு இடையூறு செய்வது கண்டு கோபம் கொண்டார். தஞ்சைக் கோட்டைத் தலைவராக அரச விசுவாசியாக சின்ன பழுவேட்டரையர் புதினத்தில் வருகிறார்.
Remove ads
நூல்கள்
சின்ன பழுவேட்டரையரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
திரைப்படம்
மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திலூம், 2023 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் சிறிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். [1]
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

