காவல்கிணறு

திருநெல்வேலி மாவட்டதில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காவல்கிணறு என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். இது  நாகர்கோயிலிலிருந்து 24 கி.மீ (15 மைல்) தொலைவிலும்,   திருநெல்வேலியில் இருந்து 69 கி.மீ (43 மைல்கள்) தொலைவிலும்,   திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 99 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் (வ. உ. சி. துறைமுகம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்தத் துறைமுகமானது காவல்கிணற்றில் இருந்து 111 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நகரத்தின் வரலாற்றை பின்நோக்கி ஆராயும்போது 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி 1698 இல்) இந்த நகரமானது பாண்டிய வம்சத்தால் ஆட்சி செய்தைக் காணலாம். ஒரு காலத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கல் சுரங்கம், மலர் சாகுபடி, பனைசார் தொழில்கள் போன்றவற்றை முதன்மையாக நம்பி இருந்தது. என்றாலும் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்களை ஏற்று உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினால் காற்றில் ஏற்படும் திருப்பத்தின் விளைவாக இந்த பிராந்தியமானது ஆயிரக்கணக்கான காற்றாலைகள் கொண்டு இந்தியாவில் பெரிய அளவில் காற்றாலை மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் பகுதியாக இருக்கிறது. காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி மலையின் கீழ் சரிவுகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு பகுதியான இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளெக்சின் சோதனை வசதிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் காவல்கிணறு Vilakku, நாடு ...
Remove ads

வரலாறு

காவல்கிணறு ஆரம்பகால திராவிட நாகரிகத்தின் வேர்களைக் கொண்டுள்ளது மேலும் இதன் வரலாற்றை 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி 1698 இல்) காணலாம். இந்த பகுதியான் பெரும்பாலான பகுதிகளானது பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது; காவிரி ஆற்றின் தெற்கிலிருந்து கன்னியாகுமரி வரை அவர்களின் அரசு நிறுவப்பட்டது. சேரர், சோழர் மற்றும் பாண்டிய நாட்டு வீரர்களுக்கு தண்ணீரை வழங்கிய கிணற்றிலிருந்து இந்த ஊருக்கு இந்த பெயர் உருவானது, இந்த கிணறு இன்றும் இந்த நகரத்தில் பாதுகாக்கப்படுகிறது. காவல்கிணறுவில் வாழும் மக்களின் முதன்மையான சமையமாக கிறிஸ்தவ சமயம் உள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது கத்தோலிக்க சமயம் மெதுவாக (கி.பி 1698) ஆண்டுகாலத்தில் மெதுவாக பரவத் தொடங்கியது. பலர் கிறிஸ்தவத்தை தங்கள் சமயமாக ஏற்றுக்கொண்டனர். சுமார் (கி.பி 1749) காலக்கட்டத்தில் ஒரு சிறிய கத்தோலிக்க தேவாலயம் உள்ளூர் மக்களால் வாராந்திர நற்கருணை சேவைகளை வழங்குவதற்காக கட்டப்பட்டது. பின்னர் (கி.பி 1843) சேக்ரட் ஹார்ட் தேவாலயம் கட்டப்பட்டது, பின்னர் அது தூத்துக்குடி மறைமாவட்டத்தால் ஒரு தனி திருச்சபையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1897 இல் ஒரு தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது; காவல்கிணறு பகுதியியில் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்கு இந்த பள்ளி உதவியது. நாட்கள் செல்லச் செல்ல, நவீன கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் காவல்கிணறு மக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுக்கொண்டே வந்தது, மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்யத் தொடங்கினர்.

Remove ads

இடம்பெயர்தல்

காவல்கிணறு வெப்பமண்டல பகுதியியில் அமைந்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெற்றது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல், அந்தக் காலக்கட்டத்தின் பிற்பகுதி வரை, இந்த முழுப் பகுதியும் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டது. இதனால் வருடாந்திர விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்கையானது கேள்விக்குறியானது. அவர்கள் தங்கள் அன்றாட தேவைகளை நிறைவு செய்ய போராடவேண்டிவந்தது; ஆனால் இந்த மிக மோசமான நிலையில், மனம் தளராமல் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஒரு நல்ல காலத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

இதன் பிறகு இந்த மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பலப்பெயரத் தொடங்கினர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டிலும் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் பலர் சென்னை (அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது), மதுரை, கோயம்புத்தூர், மும்பை, தில்லி, கோவா, துபாய், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் வேலை தேடிச் சென்றனர். இவர்கள் எங்கு சென்றாலும் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடினார்கள். மொழி வேறுபாடு, கலாச்சார வேறுபாடு, தங்குமிட பிரச்சினைகள் மற்றும் முக்கியமாக தொழில் பிரச்சினைகள் போன்ற பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டனர். பலர் சிறு தொழில்களைத் தொடங்கி ஆலைகள், சிறு நிறுவனங்கள், அச்சகம் ஆகியவற்றில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்; அவர்கள் மளிகை கடைகள், ஆயத்த ஆடையகங்கள், நிதிநிறுவன வங்கிகள், பள்ளிகளில் கற்பித்தல் போன்றவற்றில் பணியாற்றினர் மேலும் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய எளிதான திறன்களைக் கற்றுக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர்.

இந்த மாபெரும் வாழ்கைப் போரட்டத்திற்கு நடுவில், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேவாலய விருந்தின் போது சந்திப்பதை உறுதி செய்தனர். இந்த நேரத்தில், இவர்கள் தங்கள் நீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை நிர்மாணிப்பதன் மூலமும், சாகுபடிக்கு கிணறுகள் தோண்டுவதன் மூலமும் தங்கள் பூர்வீகத்தை மீண்டும் உருவாக்கத் தொடங்கினர். இதன்மூலம் விவசாய வளர்ச்சி எய்தப்பட்டது, விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போதிருந்து மக்கள் உபரி விளைச்சலை அனுபவிக்கத்தொடங்கினர். பின்னர் இவர்கள் பொது நூலகங்கள், தேவாலயங்கள் மற்றும் போக்குவரத்துக்கு நல்ல சாலைகள் ஆகியவற்றை அமைத்தனர். இது காவல்கணறுவின் வர்த்தகத்தை எளிதாக்கியது. மறுபுறம், இப்பகுதி குழந்தைகள் அதிக அளவில் கல்வி கற்றனர். இதனால் நல்ல வேலைவாய்புகளை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். காவல்கிணறு மெதுவாக செழிப்பின் ஏணியில் ஏறியது.

வளர்ச்சியான் காரணியானது மக்களின் வாழ்க்கைமுறையில் பிரதிபலித்தது; அவர்கள் அழகிய வீடுகளையும் புல்வெளிகளையும் அமைக்கத் தொடங்கினர், மேலும் காவல்கிணறு ஒரு சொர்க்கமாகத் தோற்றமளிக்கத்தொடங்கியது. இன்று காவல்கிணறுவுக்கு மக்கள் திரும்பிச் செல்லும்போது, பொதுவாக பிரபலமான தமிழ் பாடலான சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா என்ற ஊருவிட்டு ஊருவந்து என்ற படத்தின் பாடல் அவர்களுக்கு நினைவுக்குவருகிறது. காவல்கிணறுவின் வளர்ச்சி அண்டை நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பலருக்கும் ஒரு பெரிய ஆச்சரியத்தை அளித்தது; காவல்கிணறுவின் திருப்புமுனையை கண்டு அவர்கள் திகைத்துப் போனர். மெதுவாக அவர்களும் காவல்கிணறுவின் படிகளைப் பின்தொடர்ந்தனர். காவல்கிறின் மற்ற முக்கியமான அண்டை அடையாளங்கள் இருவரும் வடக்கன்குளம் மற்றும் கூடங்குளம் ஆகும்.

Remove ads

காவல்கிணறு தேவாலயங்கள்

  1. ஆர். சி தேவாலயம்
  2. புனித அந்தோணியார் தேவாலயம்
  3. அன்னை வேலாங்கண்ணி தேவாலயம்
  4. ஐ. சி. ஏ (டபிள்யூ.எம்.எம்) பெந்தேகோஸ்தே தேவாலயம்
  5. சி. எஸ். ஐ தேவாலயம்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads