காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் (Exodus of Kashmiri Hindus அல்லது Exodus of Kashmiri Pandits) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்த சிறுபான்மையின காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட காஷ்மீர இந்து மக்களை, பெரும்பான்மையின பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய அமைப்புகளால் 1989-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டின் துவகக்ம் வரை, காஷ்மீரிலிருந்து 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையானவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்.[7][8][9] தற்போது 2016-இல் காஷ்மீரில் காஷ்மீர இந்துக்கள் 2,000 முதல் 3,000 வரை மட்டுமே உள்ளனர்.[10][11][12][13][14][15][16][17][18]
இசுலாமிய தீவிரவாத அமைப்புகளால் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர இந்துக்கள் சொந்த நாட்டில் தில்லி, சண்டிகர் மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் 62,000 குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.[19][20] 2015-ஆம் ஆண்டில் ஒரே ஒரு காசுமீரப் பண்டிதர் மட்டுமே காஷ்மீருக்கு திரும்பியுள்ளார்.[21] இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றிய பின்னர், 2021-ஆம் ஆண்டில் 2,000 காஷ்மீர இந்துக்கள் மற்றும் 520 காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீருக்குத் திரும்பினர்.[22]
காஷ்மீர இந்துக்கள், காஷ்மீர் பகுதியில் தங்களுக்கு என தனி நிலப்பகுதி நிறுவுவதற்கு பனூன் காஷ்மீர் எனும் இயக்கத்தை நடத்தி வ்ருகின்றனர்.
Remove ads
மே 2022-இல் காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம்
2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட 4 இந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிகர்களை பாகிஸ்தான் ஆதரவு இசுலாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லபட்டதால், நூற்றுக்கணக்கான இந்துக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வருகின்றனர்.[23]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads