காஷ்மீர இந்துக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

காஷ்மீர இந்துக்கள்
Remove ads

காஷ்மீர இந்துக்கள் (Kashmiri Hindus) இந்தியாவின் வடக்கில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் காஷ்மீர இந்து சமயத்தைப் பின்பற்றும் இனக்குழுவினர் ஆவார்.[1] காஷ்மீர இந்து மக்கள் காசுமீர சைவத்தை பயில்கின்றனர்.[2] காஷ்மீர இந்துக்கள், காஷ்மீர் பகுதியில் தங்களுக்கு என தனி நிலப்பகுதி நிறுவுவதற்கு பனூன் காஷ்மீர் எனும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

விரைவான உண்மைகள் மொழி(கள்), சமயங்கள் ...
Thumb
சரிகா மாதா மந்திர், ஹரி பர்பத், ஜம்மு காஷ்மீர், இந்தியா
Remove ads

வரலாறு

பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட சுல்தான் சிக்கந்தர் பட்சிகான் ஆட்சியில் பெரும்பாலான காஷ்மீர இந்து மக்களை வலுக்கட்டயமாக இசுலாம் சமயத்திற்கு மதம் மாற்றப்பட்டனர்..[3][4] 1990களில் காஷ்மீர இந்துக்களுக்கு எதிரான இசுலாமியப் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 1,341 இந்துக்கள் கொல்லப்பட்டனர். எனவே 1,40,000 இந்துக்கள் காஷ்மீரத்திலிருந்து வெளியேறி சொந்த நாட்டில் ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் அகதிகளாக இன்றளவு வாழ்கின்றனர்.

1997-இல் இயற்றப்பட்ட ஜம்மு & காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் அசையாச் சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, காஷ்மீரப் பண்டிதர்கள், காஷ்மீர் சமவெளியில் விட்டுச் சென்ற அசையாச் சொத்துகளை பிறர் விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. மேலும் இச்சட்டத்தை மீறி காஷ்மீர பண்டிதர்களின் நிலங்களை பயன்படுத்துவர்கள் அதற்கான ஈட்டுத்தொகையை, நில உரிமையாளர்களான காஷ்மீரப் பண்டிதர்களுக்கு செலுத்த வேண்டும்.

காஷ்மீரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட காஷ்மீர இந்து மகக்ள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்களுக்கென தனி தன்னாட்சி பகுதியை நிறுவித்தர பனூன் காஷ்மீர் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். தங்களை காஷ்மீரில் மறு குடியமர்த்தவும், காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

காஷ்மீர இந்து மக்களில் பெரும்பான்மையாக காஷ்மீர பண்டிதர்கள்கள் இருந்தனர்.[5][6][7] மேலும் காஷ்மீர் இந்து மக்களில் சத்திரியர் மற்றும் வணிகப் பிரிவினரும் உள்ளனர்.[8][9]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads