கிசில்கும் பாலைவனம்

From Wikipedia, the free encyclopedia

கிசில்கும் பாலைவனம்
Remove ads

கிசில்கும் பாலைவனம் (Kyzylkum Desert) (உசுபேகியம்: Qizilqum/Қизилқум, قىزىلقۇم; காசாக்கு: Қызылқұм/Qızılqum, قىزىلقۇم, Russian Кызылкум), 115,000 சதுர மைல் (300,000 சதுர கி.மீ.) பரப்பளவு கொண்டது. உலகப் பாலைவனங்களில், பரப்பளவில் 16வது இடத்தில் உள்ளது. துருக்கி மொழியில் கிசில்கும் என்பதற்கு செம்மணல் எனப்பொருளாகும்.[1]

விரைவான உண்மைகள் நாடுகள், பகுதி ...
Thumb
ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா ஆறுகளுக்கு இடையே அமைந்த கிசில்கும் பாலைவனம்
Remove ads

அமைவிடம்

நடு ஆசியாவின் ஆமூ தாரியா ஆற்றுக்கும், சிர் தாரியா ஆற்றுக்கும் இடையே, ஏரல் கடலுக்கு தென்கிழக்கே, வரலாற்றுப் புகழ் மிக்க சோக்தியானா பிரதேசத்தில் கிசில்கும் பாலவனம் அமைந்துள்ளது.[2] தற்போது சோக்தியானா பிரதேசத்தின் கிசில்கும் பாலவனம், கசக்ஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. கிசில்கும் பாலைவனம் 2,98,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செம்மணல் பாலவனம் ஆகும்.

புவியியல்

கிசில்கும் பால்வனம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் அமைந்த நிலப்பகுதியில் 3,025 அடி (922 மீ) உயரம் கொண்ட மலைப்பகுதிகளும், பள்ளத்தாக்குகளும், மணல் மேடுகளும் கொண்டுள்ளது. வடக்கில் சிர் தாரியா ஆறும், தெற்கில் ஆமூ தாரியா ஆறுகள் பாயும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த இப்பாலைவனத்தில் சில பாலைவனச் சோலைகளும் உள்ளது. கிசில்கும் பாலைவனத்தில் பாயும் ஆமூ தாரியா ஆற்றுப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைப் பகுதிகளிலும் வேளாண்மை செய்யப்படுகிறது.

Remove ads

தட்பவெப்பம்

கோடைக்காலத்தில் (மே நடு முதல் செப்டம்பர் நடு வரை) இப்பாலைவனத்தின் அதிகபட்ச வெப்ப நிலை சூலை, 1983ல் 52 °C (126 °F) ஆக பதிவாகியுள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 100 முதல் 200 மிமீ ஆகும்

விலங்கினங்கள்

கிசில்கும் பாலைவனத்தில் ருசிய ஆமைகள், 1.6 m (5.2 அடி) நீள உடும்புகள், சைகா மான்கள் காணப்படுகிறது.

பொருளாதாரம்

உள்ளூர் மக்கள் கிசில்கும் பாலவனப் பகுதியின் மேய்ச்சல் நிலங்களில் ஆடுகள், குதிரைகள், பாக்திரியன் ஒட்டகங்கள் மற்றும் ஒற்றைத்திமில் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை மேய்த்து, வளர்த்து வருகின்றனர்.

கிசில்கும் பாலைவனம் தங்கம், யுரேனியம், செப்பு, அலுமினியம், வெள்ளி கனிமங்களும், இயற்கை எரிவாயு மற்றும் எரி எண்ணெய் வளங்கள் கொண்டது. எனவே இங்கு சுரங்கத் தொழில்கள் மற்றும் கனிமங்களை உருக்கும் தொழில்கள் அதிகம் உள்ளது.

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads