கிந்தா மாவட்டம்

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிந்தா மாவட்டம்map
Remove ads

கிந்தா மாவட்டம் (ஆங்கிலம்: Kinta District; சீனம்; 近打) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் இரு மன்றங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஈப்போ மாநகர் மன்றம் (Ipoh City Council), பத்து காஜா மாவட்ட மன்றம் (Batu Gajah District Council) ஆகிய இரு நகர மன்றங்கள். ஈப்போ மாநகர் மன்றம், ஈப்போவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்து காஜா மாவட்ட மன்றம், பத்து காஜா நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் கிந்தா மாவட்டம் Daerah Kinta பேராக், நாடு ...

மலேசியாவில் மக்கள் தொகையின் பெருக்கத்தைப் பொருத்து ஒரு மாவட்ட மன்றம், ஒரு நகர மன்றமாக உயர்வு காண முடியும்.ஒரு நகர மனறம் ஒரு மாநகர் மன்றமாக மாற்றம் காண முடியும். City Hall எனப்படும் மாநகர் மாளிகையின் மூலமாக கோலாலம்பூர், வட கூச்சிங், கோத்தா கினாபாலு ஆகிய நகரங்கள் நிர்வாகம் செய்யப் படுகின்றன. மலேசியாவின் இதர மாநகரங்கள் மாநகர் மன்றங்களினால் நிர்வாகம் செய்யப்ப்படுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் கிந்தா மாவட்டம் ஈய உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. உலகத்திலேயே அதிகமான ஈயம் கிந்தா மாவட்டத்தில் தான் எடுக்கப்பட்டது.[2]

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

Thumb
கிந்தா மாவட்ட வரைப்படம்
Thumb
ஈப்போ நகராண்மைக் கழகம்
Thumb
ஈப்போ மாநகரில் கலாசார நிக்ழச்சி - 2017

கிந்தா மாவட்டம் 5 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]

  • பெலாஞ்சா (Belanja)
  • சுங்கை தெராப் (Sungai Terap)
  • சுங்கை ராயா (Sungai Raia)
  • தஞ்சோங் துவாலாங் (Tanjung Tualang)
  • உலு கிந்தா (ஈப்போ புறநகர்ப் பகுதிகள்)

அரசு

கிந்தா மாவட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

1. பேராக் மாநில தலைநகரான ஈப்போவைத் தளமாகக் கொண்ட ஈப்போ நகராண்மைக் கழகம்.

2. பத்து காஜா நகரத்தை மையமாகக் கொண்ட பத்து காஜா மாவட்ட மன்றம்.

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

பின்வரும் கிந்தா மாவட்ட தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]

மேலதிகத் தகவல்கள் கிந்தா மாவட்ட இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு, இனம் ...

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தில் கிந்தா மாவட்டப் பிரதிநிதிகளின் பட்டியல் (டேவான் ராக்யாட்) (2021). மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...
Remove ads

பேராக் மாநில சட்டமன்றம்

பேராக் மாநில சட்டமன்றத்தில் கிந்தா மாவட்டப் பிரதிநிதிகள் (2021)

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads