கிரீடம் (திரைப்படம்)

ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கிரீடம் (திரைப்படம்)
Remove ads

கிரீடம் (Kireedam) 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும். இது மலையாளத்தில் சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் என்ற படத்தின் தழுவலாகும். இதில் அஜித் குமார், திரிஷா, ராஜ்கிரண், விவேக், சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பூர்ணா மார்க்கட்டு என்ற பெயரில் தெலுங்கில் எடுக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் கிரீடம், இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

நேர்மையான தலைமைக் காவலரான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை மதிக்கும் அஜித்தும் அப்படியே அதிகாரித் தேர்வுக்குத் தயாராகிறார். இதற்கிடையே அடாவடி செய்யும் தன் மகன் மீது ராஜ்கிரண் எடுக்கும் நடவடிக்கைகளால் ஆவேசமாகும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தன் செல்வாக்கால் ராஜ்கிரணை கோடியக்கரைக்கு இடமாற்றம் செய்கிறார்.

குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் அதிகாரத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமாரின் அடியாட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரை அடித்து விடுகிறார். அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் காவல்துறை வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான்.

Remove ads

பாடல்கள்

விரைவான உண்மைகள் கிரீடம், இசை ஜி. வி. பிரகாஷ் குமார் ...

ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் இசை கொண்ட இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

மேலதிகத் தகவல்கள் #, பாடல் ...
Remove ads

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ரத்தம் சிந்தும் வன்முறை, முகம் சுளிக்கும் ஆபாசம் இல்லாமல், அப்பா- மகன் சென்டிமென்ட் கதையைத் தரமான படமாகக் கொடுத்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர். ஆனால், அந்த சென்டி மென்ட்டை அளவோடு வைத்து, முதல் பாதி வேகத்தை இரண்டாம் பாதியிலும் தக்க வைத்திருந்தால், கிரீடம் பள பளவென மின்னியிருக்கும்!" என்று எழுதி 40/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads