பி. ஜெயச்சந்திரன்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. ஜெயச்சந்திரன் (P. Jayachandran, மலையாளம்: : പി.ജയചന്ദ്ര൯, 3 மார்ச்சு 1944 – 9 சனவரி 2025)[1]) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் பாடியவர். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள அரசின் திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான இரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்களைப் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம், மெல்லிசை போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஒரு போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராகப் பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராகத் தேர்வு பெற்றார்.
விலங்கியலில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.
Remove ads
திரை வாழ்வு
1965 இல் இந்திய பாக்கித்தான் போர் நிதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரனை அவர்களின் குஞ்சாலி மரக்கார் என்ற மலையாளப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படம் வெளிவரும் முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய களித்தோழன் படம் வெளி வந்தது. 1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடிய நீலகிரியுடே என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் சிவசங்கர சர்வ சரண்ய விபோ, தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. ஏ. ஆர். ரகுமான் இசையில் கிழக்குச்சீமையிலே படத்தில் அவரது பாடல் கத்தாழம் காட்டுவழி தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.
1975ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த "பெண்படா" என்ற மலையாளத் திரைப்படத்தில் வெள்ளி தேன் கிண்ணம் போல் என்ற இவரது பாடல், ஒன்பது வயதில் திலீப் சேகர் என்ற ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடலாகக் கருதப்படுகிறது.
Remove ads
இவர் பாடிய பாடல்கள்
Remove ads
இறப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயச்சந்திரன் தனது 80-ஆவது அகவையில், 9 சனவரி 2025 அன்று காலமானார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads