கிருஷ்ணா (தொலைக்காட்சி நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணா (Krishna) இவர் தமிழ் நடிகரும்,மாதிரி நடிகருமாவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் சஹானா (2003), சிதம்பர ரகசியம் (2004-2005), செல்வி (2005), தெய்வமகள் (2013-2018) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு தெய்வமகள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆனார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
கிருஷ்ணா ஆகத்து 1, 1981 இல் தமிழ்நாட்டில் சென்னையில் ரகுநந்தன் மற்றும் நளினி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது பெற்றோர் இவரது சிறுவயதிலேயே புதுடில்லிக்கு குடிபெயர்ந்தனர். இவர் தனது பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் புதுதில்லியில் மேற்கொண்டார்.
திரைப்பட வாழ்க்கை
தனது நடிப்பின் மீது கொண்ட காதலால் சென்னைக்கு நகர்ந்தார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய சஹானா என்ற தொடரில் கதாநாயகனாக 2003ஆம் ஆண்டு அறிமுகமானார். இந்த தொடர் 1985 இல் வெளியான சிந்து பைரவி என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து சிதம்பர ரகசியம் என்ற மர்மத்தொடரிலும் 2005ஆம் ஆண்டு நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த செல்வி என்ற தொடரிலும் நடித்தார். இந்தத் தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2004ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் சர்தர்ப்ப சூழ்நிலையால் அந்த திரைபபடத்தில் நடிக்க முடியமால் போனது. அதை தொடர்ந்து 2006இல் இயக்குநர் சரண் இயக்கிய இதயத்திருடன் என்ற திரைபபடம் மூலம் திரைபடத்துறைக்கு அறிமுகமானார்.[1]
இதை தொடர்ந்து ஈரம் (2009), ஆனந்தபுரத்து வீடு (2010) போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 2013ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற த் தொடரில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். இந்த தொடர் மிகவும் வெற்றி அடைந்தது. சிறந்த ஜோடி, சிறந்த கதாநாயகன் போன்ற விருதுகளையும் சன் குடும்ப விருதுகளில் வென்றுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 2010ஆம் ஆண்டு ஆனந்தபுரத்து வீடு என்ற திரைபபடத்தில் நடிகை சாயா சிங்[2] உடன் இணைத்து நடிக்கும் பொது இருவரும் காதலித்து வந்தனர். 2012ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.[3]
தொடர்கள்
Remove ads
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads