தாலாட்டு (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாலாட்டு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 26, 2021 ஆம் ஆண்டு முதல் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஷாக் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கிருஷ்ணா,[2] ஸ்ருதி ராஜ்[3] மற்றும் ஸ்ரீலதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 24 சூன் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 704 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

விரைவான உண்மைகள் தாலாட்டு, வகை ...
Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • கிருஷ்ணா - விஜயகிருஷ்ணன்
  • ஸ்ருதி ராஜ் - இசைப்பிரியா விஜயகிருஷ்ணன்
  • ஸ்ரீலதா - சின்னத்தாயி / தாயம்மா (விஜயகிருஷ்ணனின் தாய்)
    • சந்திரபாபு - 'இளம் வயது' சின்னத்தாயி

விஜயகிருஷ்ணனின் குடும்பத்தினர்

  • ரிஷி கேசவ் - முத்தையா (வளர்ப்பு தந்தை)
    • கிரண் - 'இளம் வயது' முத்தையா
  • தருணி[4] - சிவகாமி முத்தையா (வளர்ப்பு தாய்)
    • ஹரிப்ரியா - 'இளம் வயது' சிவகாமி
  • சந்தோஷ் - சுந்தரமூர்த்தி (உண்மையான தந்தை மற்றும் சின்னத்தாயின் கணவன் / தொடரில் இறந்து விட்டார்)
  • சர்வேஷ் - சுந்தரமூர்த்தி விஜயகிருஷ்ணன் (விஜய் மற்றும் இசையின் மகன்)
  • சஹானா - தேவி பிரவின் (சகோதரி)
  • வினீத் - பிரவின்

இசை குடும்பத்தினர்

  • மோகன் சர்மா - ஈஸ்வரமூர்த்தி (இசையின் தந்தை)
  • அருண்குமார் பத்மநாபன் - வாலி
  • மலர் - தாரா (வாலியின் மனைவி)

துணைக் கதாபாத்திரம்

  • தர்சிகா - தெரசா (தாயம்மாவின் வளர்ப்பு மகள்)
  • டெல்லி கணேஷ் - கணபதி குருக்கள்
  • சர்வன் / ராஜேஷ் - ருத்திரன்
  • வின்செட் ராய் - சாம்பசிவம்
  • மீனாட்சி - மீனாட்சி சாம்பசிவம்
  • நவிந்தர் .- சுகுமார் சாம்பசிவம்
  • ஸ்ரீகலா - தேவிகா
  • டினா - அபி
  • ரேகா - வசந்தி
  • காயத்ரி ‌ஸ்ரீ - நித்யா
  • கே. எஸ். ஜி. வெங்கடேஷ் - திருஞானசம்மந்தர் (சிவகாமி & சுந்தரமூர்த்தியின் தந்தை / தொடரில் இறந்து விட்டார்)
Remove ads

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர் நடிக்கின்றார். இவர் இதற்க்கு முன்பு இதே தொலைக்காட்சியில் தென்றல் (2009-2015), அபூர்வ ராகங்கள் (2015-2018), அழகு (2018-2020) போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.[5] இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா என்பவர் 'விஜயகிருஷ்ணன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இருவரும் இணைத்து நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.

இந்த தொடரின் இளவயது கதைக்கள கதாபாத்திரத்தில் சந்திரபாபு, கிரண், ஹரிப்ரியா, சந்தோஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஸ்ரீலதா, ரிஷி கேசவ், தருணி, மோகன் சர்மா, டெல்லி கணேஷ் போன்ற பல பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Remove ads

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் ஏப்ரல் 26, 2021 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 18, 2021 முதல் பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads