தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

தெய்வமகள் என்பது 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் ஒளித்திரை சார்பில் இயக்குநர் S. குமரன் என்பவர் இயக்க வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் தெய்வமகள், வகை ...

இது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் மிக அதிகமான தொலைக்காட்சி இலக்கு அளவீட்டு புள்ளிகளைப் பெற்ற தொடர் ஆகும். இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மார்ச்சு 25, 2013 ஆம் ஆண்டு திருமதி செல்வம் என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக ஒளிபரப்பாகி பெப்ரவரி 17, 2018 ஆம் ஆண்டு 1,466 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நாயகி (2018-2020) என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 1, 2021 முதல் இரவு 7 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

பிரகாஷ் குடும்பத்தினர்

  • குமார் - சிதம்பரம் (தந்தை)
  • வெண்ணிற ஆடை நிர்மலா - ஜானகி சிதம்பரம் (தாய்)
  • பிரகாஷ் ராஜன் - குமார் சிதம்பரம் (அண்ணன்)
  • அரவிந்த் - ராஜு சிதம்பரம் (இரண்டாவது சகோதரர்)
  • அனிதா நாயர் → சிந்து சியாம் - திலகவதி ராஜு
  • நிஷா கிருஷ்ணன் → வனிதா ஹரிஹரன் - ராகினி வசந்த் (சகோதரி)
  • சுசித்ரா - அகிலா குமார்
  • சுஹாசினி -வினோதினி மூர்த்தி (கயாத்திரியின் சகோதரி)
  • கணேஷ் - மூர்த்தி
  • ராதா - சத்யகலா மூர்த்தி

சத்யபிரியா குடும்பத்தினர்

Remove ads

மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்றம்

Oohala Pallakilo என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07 மணிக்கு ஜெமினி தொலைகாட்சியிலும் மற்றும் மலையாளம் மொழியில் பாக்யலக்ஷ்மி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இவற்றை பார்க்க

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads