கிரே (அலகு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிரே (Gray) என்பது (குறியீடு: Gy) ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கதிர் ஏற்பளவைக் குறிக்கும் ஒரு அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஓர் ஊடகம் தன்மேல் விழும் கதிர்வீச்சிலிருந்து ஒரு ஜூல் ஆற்றலை ஏற்குமாயின் அந்த அளவு ஒரு கிரே எனப்படும்[1]. இத்தகு ஆற்றல் அயனியாக்கும் கதிர்வீச்சுகளான எக்சு-கதிர், காமா துகள்கள், அணுக்கரு துகள்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

1 கிரே = 1ஜூல்/கி.கிராம்

இது கதிர்வீச்சு ஏற்பளவின் அலகாகும். ஒரலகு நிறையில் படியும் ஆற்றலின் அளவை அளக்கிறது. அதே போல் கெர்மா என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் கதிர்வீச்சு, இவை ஒளியணுக்களில் உள்ள ஆற்றல் இலத்திரன்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால் பெறப்படுகிறது.

cgs அலகுகளில் கிரே என்பது ராட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.(0.01 Gy சமமாகும்).[2] இது அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் அலகாகும்.

இங்கிலாந்து இயற்பியலாளர் லூயி கெரால்டு கிரே பெயரால் அழைக்கப்படுகிறது. உயிர் திசுக்களி்ன் மீது எக்சு-கதிர் மற்றும் ரேடியம் கதிர்வீச்சு மூலம் ஏற்படும் விளைவுகளை முதன்முதலில் கண்டறிந்தார்.[3] It was adopted as part of the International System of Units in 1975.

Remove ads

வரையறை

Thumb
உடலின் வெளிப்பகுதியில் விழும் கதிர்வீச்சின் அளவில் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும் படம்
Thumb
அனைத்துலக அலகு முறையில் கதிர்வீச்சின் அளவைக் குறிக்கும் வரைபடம்

ஒரு கிரே என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் ஒரு அலகு ஆற்றலை உருவாக்கும் அயனியாக்கும் கதிரின் அளவாகும்.

அனைத்துலக அலகு முறையின் படி சூல் / கிலோகிராம் என்ற அலகிற்கு பதிலாக கிரே என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.[4]

Remove ads

பயன்கள்

கதிர் வீச்சை அளவை அளக்க பல இடங்களில் கிரே அலகு பயன்படுகிறது.

பொருட்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு

பொருட்களின் மீது படும் கதிர்வீச்சின் அளவைக் கண்டறிய கிரே பயன்படுகிறது. உணவுப் பொருளின் மீது படும் கதிர் வீச்சின் அளவைக் கண்டறியப் பயன்படுகிறது. இந்த அளவுகளை கண்காணிப்பதன் மூலம், பொருளின் மீது கதிர் வீசலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்க பயன்படுகிறது.

கெர்மா

("kinetic energy released per unit mass") சுருக்கமே கெர்மா என்பதாகும். கதிர் வீசலால் ஏற்படும் அயனியாக்கல் காரணமாக வெளிவிடப்படும் ஆற்றலை அளக்கும் அளவீடாகும். இது கதிர்வீசலின் ஏற்கும் அளவை அளக்காமல், அயனியாக்கும் ஆற்றலின் அளவை அளக்கிறது.

திசுக்களால் உறிஞ்சப்படும் கதிர்வீச்சின் அளவு

கதிர் மருத்துவம் மற்றும் கதிர் உயிரியல் ஆகிய துறைகளில் திசுக்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு முக்கிய பங்காற்றுகிறது. கதிர் வீச்சால் திசுக்களில் படியும் ஆற்றலின் அளவை அளப்பது மிக அவசியமாகிறது.[5][6][7]

Thumb
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவியின் மூலம் எடுக்கப்பட்ட படம்

புற்று நோயின் தன்மை மற்றும் வகையைப் பொறுத்து கதிர் மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. தோலில் ஏற்படும் புற்று நோய் கட்டிகளில் 60 முதல் 80 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்களில் 20 முதல் 40 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய் பரவாமல் தடுக்க 45–60 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. தலை, கழுத்து, மார்பு பகுதிகளில் 1.8–2 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது.

வயிற்று பகுதிகளில் கதிர் உயிரியலில் பயன்படுத்தப்படும் எக்சு கதிரின் சராசாி அளவு 0.7 mGy ஆகும். வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி 8 mGy வரையுள்ள எக்சு கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. இடுப்புப் பகுதிகளில் 6 mGy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது.[8]

கதிரியக்க நஞ்சூட்டல்- திசுக்களில் ஏற்படும் விளைவைக் கண்டறிய கிரே அலகு பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்கத்தால் ஏற்படும் அயனியாக்கலைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. 5 கிரே அளவுள்ள கதிரியக்க வீச்சை, மனித உடற்பகுதிகளில் வெளிப்படுத்தும் போது, 14 நாட்களுக்குள் மரணம் நிகழ்கிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads