கிர்குக் மாகாணம்

ஈராக்கின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிர்குக் கவர்னரேட் (Kirkuk Governorate, அரபி: محافظة كركوك Muḥāfaẓat Karkūk Kurdish Parêzgay Kerkûk, Syriac Karḵ Sloḵ, துருக்கியம்: Kerkük ili ) அல்லது கிர்குக் மாகாணம் என்பது வடக்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 9,679 சதுர கிலோமீட்டர்கள் (3,737 sq mi) . மாகாணத்தில் 2017 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையானது 1,259,561 பேர்.[1] மாகாண தலைநகராக கிர்குக் நகரம் உள்ளது. இந்த நகரமானமானது நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1976 முதல் 2006 வரை, இந்த மாகாணம் "தேசியமயமாக்கல்" என்று பொருள்படும் அட்-தமீம் கவர்னரேட் [2] என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இது பிராந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களின் தேசிய உரிமையைக் குறிக்கிறது. 1976 க்கு முன்னர் இது கிர்குக் கவர்னரேட் என்று அழைக்கப்பட்டுவந்தது. 2006 இல், "கிர்குக் கவர்னரேட்" என்ற பெயர் மீண்டும் வைக்கப்பட்டது.

Remove ads

மாகாண அரசு

Thumb
கிர்குக் கவர்னரேட் மாவட்டங்கள்
  • ஆளுநர்: ரக்கன் சயீத் அல்-ஜப ou ரி [3]
  • மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): ரெப்வர் தலபானி [4]

மாவட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், மொத்த மக்கள் தொகை, 2006 ...

மக்கள் வகைப்பாடு

கிர்குக் கவர்னரேட் எல்லைகள் 1976 இல் மாற்றியமைக்கப்பட்டன; சுலைமானியா மாகாணம், தியாலா மாகாணம் மற்றும் சலாடின் மாகாணம் போன்ற கவர்னரேட்டுகளில் 4 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. இந்த 4 மாவட்டங்களுடன், சேர்ந்திருந்த கிர்குக் மாகாணமானது குர்து மக்களை பெரும்பான்மையானவர்களாக கொண்டு இருந்தது.[5] அதன்பிறகு கிர்கு மாகாணத்தில் அரபு மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஜாப் மாவட்டத்தை மொசூல் மாகாணத்தில் இருந்து பிரித்து சேர்க்கப்பட்டது.[6]

பாத் கட்சியின் அரபு மயமாக்கல் கொள்கைகளால், மாகாணத்தின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் 40 ஆண்டுகளுக்குள் அரேபியர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்தது. எவ்வாறாயினும் மாகாணத்தில் வாழும் இன மக்கள் குறித்த மிகவும் நம்பகமான தகவல்கள் 1957 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே ஆகும்.[7] குர்துகளின் எண்ணிக்கை 1957 முதல் 1977 வரை ஒப்பீட்டளவில் மாறாமல் இருந்தது, அவர்களின் எண்ணிக்கை உயராமல் உள்ளதற்கு 1990 களில் அரபு மயமாக்கல் செயல்முறை காரணமாக அமைந்தது.[8] பாத் கிர்குக் மாகாண எல்லைகளை மறுவரையறை செய்ததால் துர்க்மென்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாகாணத்தில் அவர்களின் சதவீதம் 21% என்பதிலிருந்து 7% ஆக குறைந்தது.

1977 முதல் 2,000 கிறிஸ்தவர்கள் (அசீரியர்கள்) அரேபியர்களாக பதிவு செய்யப்பட்டனர். வளைகுடா போரின் முடிவில் துவங்கி 1999 வரை சுமார் 11,000 குர்திஷ் குடும்பங்கள் கிர்குக்கிலிருந்து நாடு கடத்தப்பட்டன.[9][10] 2003 ஈராக் மீதான படையெடுப்பிலிருந்து, 100,000 குர்துகள் கிர்குக் நகரில் குடியேறினர் [11] இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேலதிகத் தகவல்கள் தாய் மொழி, சதவிதம் ...

சர்வதேச நெருக்கடி குழுவின் அறிக்கை 1977 மற்றும் 1997 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புகளின் புள்ளிவிவரங்கள் "அனைத்துமே மிகவும் சிக்கலானதாகக் கருதப்படுகின்றன. ஆட்சியாளர்களின் சூழ்ச்சித் திறன் மற்றும் சந்தேகங்கள் காரணமாக கணக்கெடுப்பில் "ஈராக் குடிமக்களை அரபு அல்லது குர்திஷ் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதாக குறிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்;[12] இதன் விளைவாக, ஈராக்கின் மூன்றாவது பெரிய இனக்குழுவான - ஈராக் துர்க்மென் போன்ற பிற இன சிறுபான்மையினரின் எண்ணிக்கையை கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட்டது.

Remove ads

2018 தேர்தல் முடிவுகள்

கிர்குக் மாகாணத்தில் 2018 ஈராக் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பின்வருமாறு. பிராந்தியத்தின் புள்ளிவிவரங்களை மதிப்பிடுவதற்கு தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுட்டுள்ளன. இருப்பினும், ஈராக்கிய குடிமக்கள் அதன் இன அபிமான அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்று கூறத் தேவையில்லை.

மேலதிகத் தகவல்கள் கட்சி, மொத்த வாக்கு ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads